எம்.எஸ்.வர்டில் டெக்ஸ்ட் போமட்டிங் பற்றி உங்கள் நண்பருக்குக் கற்றுக் கொடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு டைப் செய்த ஒரு பந்தி உங்களுக்கு அவசியம். ஆனால் டைப் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே டைப் செய்து சேமித்து வைத்துள்ள ஒரு பைலைத் திறந்தும் தேவையான டெக்ஸ்டைப் பெற்றுக் கொள்ள்லாம். எனினும் அதனை விட இலகுவாக டெக்ஸ்டைப் பெற எம்.எஸ்.வர்டில் ஒரு வழியுள்ளது. இதன் மூலம் டெக்ஸ்டை டைப் செய்யாமலேயே பக்கம் முழுவதும் நிரப்பிக் கொள்ள்லாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
எம்.எஸ்.வர்ட்டைத் திறந்து புதிய ஆவணமொன்றில் =rand() என டைப் செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள். அடுத்த வினாடியே ஒரு பந்தி டெக்ஸ்ட் தோன்றக் காணலாம். இந்த வசதி எம்..எஸ்.வர்ட் 2007 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் கிடைக்கிறது. எனினும் 2007 பதிப்ப்பில் தோன்றும் டெக்ஸ்ட் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்பிலிருந்து மாறுபட்டது.