வாட்ஸ்ஸப், கூகுல் மேப்ஸ்ஸில் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் காண்பிக்கும் வசதியைப் பயன் படுத்துவது எப்படி?

உங்கள் நெருங்கிய உறவினர் ஏதோ ஒரு அலுவலாக தனியாக தொலை தூரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை உங்களிடம் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அவர் வெளியில் சென்ற நேரத்திலிருந்து வீடு வரும் வரை அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவருக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பதும்  குறுஞ் செய்தி அனுப்புவதுமே உங்கள் வேலையாகக் கூட இருக்கும். அவர் மேல் இருக்கும் அன்பில் ஈடுபாட்டில் நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டாலும் அடிக்கடி தொலைபேசி அழைப்பை எடுப்பதும் குறுஞ்செய்தி அனுப்புவதும் நிச்சயம் அவருக்கு எரிச்சலூட்டும் விடயமாகவும் இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்பை எடுக்காமலும் குறுஞ் செய்தி அனுப்பாமலும் ஒருவர் இருக்கும் இடத்தை நேரடியாகக் அறிந்து கொள்ளும்  வசதியைத் தருகிறது வாட்ஸ்-அப் மற்றும்  கூகுல் மேப்ஸ் செயலிகள். நேரடி இருப்பிட பகிர்வு (live location sharing) எனும் இந்த வசதி வாட்ஸப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகமானதுடன் கூகுல் மேப்ஸில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் அறிமுகமானது. ஆனாலும் இந்த வசதியை பலரும் அறிந்திருப்பார்கள் என்றோ அறிந்த பலரும் கூடப் பயன் படுத்தியிருப்பார்கள் என்றோ நான் நினைக்கவில்லை.

ஒருவர் தான் இருக்கும் இடத்திற்கான இணைப்பை  வாட்ஸ்-அப் அல்லது  கூகுல் மேப்ஸ் மூலம் தனது உறவினர் அல்லது நண்பருடன் பகிர்ந்ததன் பின்னர் அந்த இணைப்பைப் பயன் படுத்தி  நிகழ் நேரத்தில் அவரது இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடிவதுடன் அவர் பிரயாணத்தில் இருந்தாலும் கூட அவரின் இருப்பிடம் பற்றிய தகவலை இற்றைப் படுத்திக் காண்பிக்கும்.

நிகழ் நேரத்தில் இருப்பிடத்தைக் காண்பிக்க வேண்டிய  நேர அளவை முன் கூட்டியே நீங்கள் தீர்மானிக்க முடிவதுடன்  விரும்பிய நேரத்தில் நீங்களே அதனை மேலும் காண்பிக்காமல் நிறுத்திக் கொள்ளவும் முடியும்.

வாட்ஸ்-அப்பில் செயலியில் நேரடி இருப்பிட பகிர்வு வசதியைப் பயன் படுத்த பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

முதலில் வாட்ஸ்-அப் செயலியைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Chats டேபில் தட்டி உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள  விரும்பும் நண்பரின் பெயரை தொடர்பு பட்டியலிலிருந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அப்போது தோன்றும் செய்திப் பெட்டியில் Attachment (Paper clip ஐக்கான்) பட்டனில் தட்டுங்கள். தோன்றும் மெனுவில் Location ஐக்கானில் தட்டி Share live location என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து உங்கள் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் காண்பிக்கக்  வேண்டிய நேர அளவைத் தெரிவு செய்வதோடு விரும்பினால் மேலதிக தகவல்களை Add comment  பகுதியில் டைப் செய்து Share பட்டனில் தட்டி பகிர்ந்து விடுங்கள்.  வாட்ஸ் அப்பில் இந்த செய்தி கிடைக்கும் பெறும் உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய இணைப்பில்  தட்டுவதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் நீங்கள் குறிப்பிடும் நேர அளவின் படி அறிந்து கொள்ள முடியும்.

அதே போன்று கூகுல் மேப்ஸில் நிகழ் நேர இருப்பபிட பகிர்வைப் பயன்படுத்தப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

முதலில் கூகுல் மேப்ஸ் செயலியைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து இடது புற மேல் மூலையில் உள்ள மெனு பட்டனில் தட்டுங்கள்.  தோன்றும் மெனுவில் Location sharing தெரிவு செய்யுங்கள். அடுத்து இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும் நண்பரை Add people பட்டனில் க்ளிக் செய்து தெரிவு செய்வதோடு பகிர்ந்து கொள்ளும் நேர அளவையும் விருப்பம் போல் மாற்றி Share பட்டனில் தட்டுங்கள்.  செய்தி கிடைக்கப் பெறும் உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய இணைப்பில்  தட்டுவதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும்

வாட்ஸ்-அப் கூட கூகுல் மேப்ஸ் உதவியுடனேயே நிகழ் நேர இருப்பிட வசதியை  வழங்குகிறது  என்பது குறிப்பிடத்தக்கது

About admin

Check Also

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp

How to Find Out if You Have Been Blocked by Someone on WhatsApp வாட்சப்பில் ஏதோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *