பவபொயிண்ட்டில் ஒரு ஸ்க்ரீன் சேவர்


எம்.எஸ். பவபொயிண்ட்டில் உருவாக்கிய ப்ரசன்டேசன் ஒன்றை டெஸ்க்டொப்பை அலங்கரிக்கும் ஒரு ஸ்க்ரீன் சேவராக இய்ங்க வைக்கலாமா என என் மாணவன் ஒருவன் என்னிடம் கேட்டான். நானும் உடனே “பவபொயிண்டில் நேரடியாக ஸ்க்ரீன் சேவராக் மாற்றும் வசதி கிடையாது. ஆனால் அதற்கென மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் ஏராளமான மென்பொருள் கருவிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்வதன் மூலம் ப்ரசண்டேசன் ஒன்றை ஸ்க்ரீன் சேவராக மட்டுமல்லாது ஒரு வீடியோ பைலாக, மற்றும் ப்லேஸ் (Flash) பைலாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.
நான் சொன்னது சரியான பதில்தான் என்றாலும் எனக்குத் திருப்தி தரவில்லை. அதனால் பவபோயிண்ட் ப்ரசண்டேச்ன் ஒன்றை புதிதாக எந்த வொரு மென்பொருளும் நிறுவாது எவ்வாறு ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றலாம் என முயற்சித்துப் பார்த்ததில் எனக்கொரு வழி தோன்றியது. (இதொன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல) அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலில் பவபொயின்டைத் திற்ந்து ஒரு ப்ரசண்டேசனை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் சேமிப்பதற்கு பைல் மெனுவில் Save As தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Save As டயலொக் பொக்ஸில் அதனை சேமிப்பதற்கான ஒரு போல்டரைத் தெரிவு செய்து விட்டு Save as type எனுமிடத்தில் Device Independent Bitmap (*.bmp) என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Every Slide அல்லது Current Slide Only என்பதைத் உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து ஓகே செய்யுங்கள். அப்போது ஒவ்வொரு ஸ்லைடும் பிட்மெப் (Bitmap) படங்களாக அந்த போல்டரினுள் சேமிக்கப்படும்.
அடுத்து பவபொயின்டை மூடி விட்டு டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்து வழமையாக ஸ்க்ரீன் சேவர் செட்டிங் செய்யும் Display Properties டயலொக் பொக்ஸைத் திறந்து கொள்ளுங்கள்,
டிஸ்ப்லே ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் Screen saver டேபின் கீழ் My Pictures Slideshow தெரிவு செய்து அதன் அருகேயுள்ள Settings பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.அப்போது தோன்றும் My Pictures Screen Saver Options எனும் சிறிய விண்டோவில் How often should pictures change? எனுமிடத்தில் எந்நேர இடை வெளிகளில் படங்கள் மாற வேண்டும் எனவும் How big should pictures be? எனுமிடத்தில் படத்தின் அளவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதனையும் உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்து விட்டு Use pictures in this folder எனுமிடத்தில் க்ளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ப்ரசன்டேசனை சேமித்த அந்த போல்டர் அமைந்திருக்கும் இடத்தையும் காட்டி விட்டு Preview பட்டனில் க்ளிக் செய்யுங்கள் உங்கள் ப்ரசண்டேசனை ஒரு அழகிய ஸ்க்ரீன் சேவராக திரையில் காணலாம். ஆனால் ப்ரசண்டேசனில் நீங்கள் வழங்கிய Animation Effects எதுவும் செயற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பவர்பொயிண்டில் ஒரே தடவையில் பொண்டை மாற்றிட..பவர்பொயிண்ட் ப்ரசண்டேசன் ஒன்றில் நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் ஒவ்வொரு ஸ்லைடாகத் தெரிவு செய்து அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ப்ரசண்டேசனில் உள்ள மொத்த ஸ்லைடுகளிலும் பொண்டை மாற்றுவதற்கு போமட் மெனுவுல் Replace Font தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய பெட்டி தோன்றும் Replace எனுமிடத்தில் தற்போது பயன் படுத்தியுள்ள எழுத்துருவின் பெயரைக் காட்டும். அதே போல் With எனுமிடத்தில் தேவையான பொன்டைத் தெரிவு செய்து ரிப்லேஸ் பட்டனில் க்ளிக் செய்ய ஒரே முறையில் எல்லா ஸ்லைடுகளிலும் பொண்ட் மாறி விடும்.

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

3 comments

  1. suthanthira.co.cc

    Please add tamilish button for me to vote. You have been added to the rss bundle and top ten listed in suthantira ilavasa menporul

  2. எனது ப்லோக் டொப் டென்னில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் 33 ஆவ்து இடத்தில் இருப்பதைப் பார்த்தேன்.

    உங்கள் விருப்பம் இப்போதே நிறைவேற்றப் படுகிறது நண்பரே!

  3. அதை டாப் என் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது டாப் முப்பது ஆகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *