எம்.எஸ்.வர்ட் Selection techniques


எம்.எஸ்.வர்டில் டைப் செய்த ஆவணங்களை நேர்த்தியாக போமட் செய்ய வேண்டுமானால் முதலில் அந்த டெக்ஸ்டைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். என்பது நீங்கள் அறிந்த விடயம்தான் அதற்கு மவுஸ் கீபோர்ரட் இரண்டையும் பயன்படுத்த முடியும். டெஸ்டைத் தெரிவு செய்வதிலும் பல உத்திகள் (Selection techniques) உள்ளன. அவ்வுத்திகளையே இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சொல்லைத் தெரிவு செய்வதற்கு அந்த சொல்லின் மீது டப்ள் க்ளிக் செய்யுங்க்ள்.
கீபோர்ட் மூலம் ஒரு சொல்லைத் தெரிவு செய்ய Ctrl + Shift விசைகளுடன் இடம் அல்லது வலம் நோக்கிய அம்புக்குறி விசைகளை (Arrow Keys) அழுத்த வேண்டும்.
ஒரு வாக்கியத்தைத் தெரிவு செய்வதற்கு Ctrl விசையை அழுத்தியவாறு அந்த வாக்கியத்தின் எப்பகுதியிலும் ஒரு க்ளிக் செய்யுங்க்ள்.
ஒரு பந்தியைத் தெரிவு செய்வதற்கு அந்தப் பந்தியின் மீது மூன்று க்ளிக் செய்யுங்கள். அல்லது பந்தியின் இடப்புற ஓரத்தில் (left margin) மவுஸ் பொயிண்டரை நகர்த்தும் போது அது வலப்புறமாகத் திரும்பும். அப்போது இரட்டைக் க்ளிக் செய்யுங்கள்.
Shift விசையை அழுத்தியவாறு பந்தியில் தேவையான இடத்தில் க்ளிக் செய்யும் போது கர்ஸர் (Cursor / Insertion Point) உள்ள இடத்திலிருந்து க்ளிக் செய்த இடம் வரை தெரிவு செய்யப்படும்.
Shift விசையை அழுத்தியவாறு அம்புக்குறி விசைகளை அழுத்தும் போது விரும்பிய திசையில் டெக்ஸ்டைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
கர்ஸர். உள்ள இடத்திலிருந்து ஒரு வரியின் முடிவிடம் மட்டும் தெரிவு செய்ய கீபோர்டில் Shift + End. விசைகளை அழுத்துங்கள்.
கர்ஸர் உள்ள இடத்திலிருந்து ஒரு பந்தியின் முடிவிடம் மட்டும் தெரிவு செய்ய Ctrl + Shift + Down Arrow விசைகளை ஒரே தடவையில் அழுத்துங்கள்.
கர்ஸர் உள்ள இடத்திலிருந்து ஆவணத்தின் முடிவு வரை தெரிவு செய்ய Ctrl + Shift + End. விசைகளை ஒரே முறையில் அழுத்த வேண்டும்.
இடப்புறமுள்ள ஓரத்தில் மவுஸ் பொயிண்டரை நகர்த்தி ஒரு க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு வரி மட்டும் தெரிவு செய்யப் படும்.
இடப்புறம ஓரத்தில் மவுஸ் பொயிண்டரை நகர்த்தும் போது அது வலப்புறமாகத் திரும்பும்.. அப்போது மூன்று க்ளிக் (triple click) செய்ய ஆவணம் முழுவதும் தெரிவு செய்யப் படும்.
கீபோர்ட்டில் Ctrl + A விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியும் ஆவணம் முழுவதும் தெரிவு செய்யலாம். .

About admin

Check Also

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *