ஒரு ஃபோல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்து அந்த ஃபோல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் ஊரளவழஅணைந டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கான்களைக் அங்கே காணலாம்.
அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும்பொது ஐக்கான்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம். அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கான். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான். இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த ஃபோல்டர் மறைந்து விடுவதைக் காணலாம். மவுசைப் பயன் படுத்தி அந்த போல்டர் இருந்த பகுதியைத் தெரிவு செய்யும் போது மட்டுமே ஒரு ஃபோல்டர் இருப்பது கண்ணுக்குப் புலப்படும்.
இந்த ஃபோல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டுப் பாதுகாக்கலாம். யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து ((Hidden Folders)) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பனதாகும்.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil