YTCutter என்பது யுடியுப் வீடியோவின் தேவையான ஒரு பகுதியை மட்டும் பதிவிறக்கம் செய்யும் வசதியைத் தரும் ஒரு இணையதளம். ஒரு முழுமையான YouTube வீடியோவைப் பதிவிறக்க செய்யாமல் அதன் ஒரு சிறிய கிளிப் மட்டுமே தேவை எனும் போது இக்கருவியின் மூலம் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யலாம்.
இலகுவான இடை முகப்புடன் கூடிய இவ்வலைச் செயலியில் ஒரு YouTube வீடியோவின் URL ஐ நகலெடுத்து ஒட்டிய உடனேயே, வீடியோ இயங்கத் தொடங்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் போது Start என்பதைக் கிளிக் செய்யவும், முடியும் போது End க்ளிக் செய்யவும் வேண்டும். நீங்கள் விரும்பினால் நேர அளவுகளை மாற்றம் செய்யவும் முடியும். வீடியோ கிளிப் எத்தனை வினாடிகள் கொண்டது என்பதையும் இடை முகப்பு காண்பிக்கும். மேலும் பதிவிறக்குவதற்கு முன்பு அதைச் சரிபார்க்க எளிதான முன்னோட்டம் (Preview) பட்டனும் கிடைக்கிறது.
வெட்டியெடுத்த கிளிப்பை வீடியோ கோப்பு (MP4), பகை கோப்பு அல்லது ஆடியோ கோப்பு (Mp3) என பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் வீடியோவைப் பார்க்கும் தெளிவுத்திறனில் mp4 கோப்பு பதிவிறக்கப்படும். எனவே நீங்கள் விரும்பினால் முன்பே உயர்-தெளிவுத் திறனை தேர்ந்தெடுக்க வேன்டும்.
மொத்தத்தில், YTCutter என்பது நாம் பார்த்த மிக அவசியமான மற்றும் எளிதான மூன்றாம் தரப்பு YouTube பயன்பாடுகளில் ஒன்றாகும். ஆனால் இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை யூடியூப் நிர்வாகம் நீண்ட நாட்கள் அனுமதிக்கும் என எதிர் பார்க்க முடியாது. எனவே இருக்கும் காலத்திலேயே அதனைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இணையதள முகவா https://ytcutter.com/