Your PC can’t run Windows 11? விண்டோஸ் 11 நிறுவுவதில் சிக்கலா?

Your PC can’t run Windows 11 விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது விண்டோஸ் 11 நிறுவலுக்கான கணினி தேவைகளை சிறிது உயர்த்தியுள்ளது மைரோசாப்ட்.

புதிய விண்டோஸ் 11 புதுப்பிற்கு 1GHz செயலி மற்றும் குறைந்தது 4 ஜிபி ரேம் (விண்டோஸ் 10 இல் 2 ஜிபி ஆக இருந்தது) போன்ற வழமையான தேவைகளுடன் புதிதாக TPM 2.0 (Trusted Platform Module) பதிப்பும் கணினியில் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது

டிபிஎம் என்பது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய (chip)-சிப் ஆகும். இது கணினிக்கு ஹேக்கர் போன்றவர்களிடமிருந்து மேலதிக பதுகாப்பை வழங்குகிறது.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய கணினிகளில் அனேகமாக இந்த சிப் இல்லாமல் இருக்கலாம் அல்லது அதன் பழைய பதிப்பே (டிபிஎம் 1.2) இருக்கும்.

அப்படியான கணினி வைத்திருப்பவர்கள் டிபிஎம் 2.0 சிப்பை வாங்கி மதர் போர்டில் பொருத்த வேண்டும். இது எல்லோராலும் செய்யக் கூடிய வேலையல்ல.

விண்டோஸ் 11 இன் இன்சைடர் ப்ரிவியூ பதிப்பு வெளியீட்டின் பின்னர் டிபிஎம் 2.0 சிப்பின் விலையும் ஆன்லைன் சந்தையில் அதிகரித்திருக்கிறது.

இருந்தாலும் டிபிஎம் 2.0 இல்லாதவர்கள் விண்டோஸ் 11 இன் Insider preview பதிப்பை நிறுவி பரீட்சித்துப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட நமது டெக் ஆர்வளர்கள். டிபிஎம் 2.0 இல்லாமலேயே அதனை நிறுவ குறுக்கு வழிகளையும் கண்டு பிடித்து விட்டனர்.

அதற்கு விண்டோஸ் 10 இயங்கு தளத்தின் installation folder லுள்ள ஒரு .dll ஃபைலை விண்டோஸ் 11 இன் அதே ஃபைலுக்குப் பதிலாக பிரதி செய்து விடுகிறார்கள். இதன் காரணமாக டிபிஎம் 2.0 ஐக் கேட்காமலேயே (பை-பாஸ்) அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.

இந்த டிபிஎம் 2.0 விண்டோஸ் பயனர்களிடையே தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதுடன் அவர்களை எரிச்சலூட்டவும் செய்துள்ளது. சில வேளை விண்டோஸ் 11 இன் அதிகாரபூர்வ வெளியீட்டின் போது இந்த டிபிஎம் 2.0 பதிப்பின் தேவை நீக்கப்பட வாய்ப்பும் உள்ளது.

உங்கள் கம்பியூட்டரில் TPM பதிப்பை அறிந்து கொள்ளவிண்டோஸ் டாஸ்க்பரில் உள்ள சேர்ச் பாக்ஸில்tpm.msc என டைப் செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள்.


அப்போது தோன்றும் விண்டோவில் TPM பதிப்பைக் காணலாம்.

மேலும்

Intel CPU: 8th generation அல்லது அதனை விடப் புதிய
AMD CPU: Ryzen 2000 அல்லது அதனை விடப் புதிய

ப்ராஸஸ்ஸர்களையே விண்டோஸ் 11 ஆதரிக்கும் எனவும் மைரோசாப்ட் அறிவித்துள்ளது.

About admin

Check Also

List of Google services and apps that use AI

AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் Google சேவைகள் மற்றும் பயன்பாடுகள் கூகுள் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *