WhatsApp is rolling out disappearing photos feature

WhatsApp is rolling out disappearing photos feature படத்தைப் பார்த்ததும் மறைந்து விடும்  வசதியை  வாட்சப் வெளியிட்டுள்ளது.  வாட்சப்பின் இந்தப் புதிய அம்சம்  ‘ஒரு தடவை பார்’ ‘View Once’  என்று அழைக்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் உள்ள காலாவதியான expiring media  மீடியா அம்சம் போல் செயல்படுகிறது.

‘View Once’ அம்சத்தைப் பயன் படுத்தி அனுப்பிய செய்தியைப் பெறும் நபர் அதனைத் திறந்து பார்த்து. அரட்டையிலிருந்து வெளியேறியதும் அந்தப் படம் தானாக மறைந்துவிடும். அவரது மொபைல் கருவியில் அந்தப் படம் சேமிக்கப்பட மாட்டாது.  இந்த அம்சம் தற்போது Android WhatsApp பயனர்களுக்கென கிடைக்கிறது. ஆனால் இன்னும் இது பீட்டா நிலையிலேயே இருப்பதால் எல்லோருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது.

WhatsApp is rolling out disappearing photos feature

பயனர்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து மறையும்  படங்களை அனுப்ப முடியும். படத்தைத்  தேர்ந்தெடுத்ததும், கடிகாரம் போன்ற ஐகானைத் தட்ட வேண்டும், இது “தலைப்பைச் சேர்” (Add a caption) என்பதன் அருகே காண்பிக்கும்.

இந்த வசதி மூலம் படங்களை மட்டுமல்லாமல் வீடியோ மற்றும் GIF எனும் அசையும் படங்களையும் அனுப்ப முடியும்.  ஒரு படத்தை வீடியோவை  பகிரும்போது ‘View Once” பட்டன்  உங்களுக்குக்  காண்பிக்கா விட்டால், நீங்கள் இன்னும் இந்த அம்சத்தைப் பெறவில்லை என்று அர்த்தம். இந்த அம்சத்தை WhatsApp இன் 2.21.14.3 Android பதிப்பில் காணலாம். அதற்கு வாட்சப்பை செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்

இந்த வாட்சப் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

ஒருவர் வாட்சப்பிலுள்ள  read / receipts அம்சத்தை முடக்கியிருந்தாலும், நீங்கள் அனுப்பிய  ‘View Once” என அனுப்பிட படத்தை வீடியோவை  அவர்  திறந்து பார்த்தாரா இல்லையா என்பதையும் அனுப்பியவரால்  அறிந்து கொள்ள முடியும், ஆனால் பெறுநர் உங்கள் படத்தை எப்போது பார்த்தார் என்பதை நீங்கள் அறிய முடியாது.

குழுக்களிலும் ‘View Once அம்சத்தைப்  பயன்படுத்தி படங்களையும் வீடியோக்களையும் பகிர உங்களுக்கு அனுமதி உண்டு. ஒரு வாட்சப் குழுவில் மறையும்  படத்தைப் பகிரும் போது ,  read / receipts அம்சத்தை நீங்கள் முடக்கியிருந்தாலும் பிற அங்கத்தவர்கள் மறையும்  படங்களைத் பார்த்தார்களா இல்லையா என்பதையும் பார்க்க முடியும்.

மேலும் “Message Info பிரிவில் அவர்றைத்  திறந்து பார்த்தவர்கள்  யார் என்பதையும் நீங்கள் காண முடியும். “பொதுவான குழுக்களில் உங்களது  தடுக்கப்பட்ட தொடர்புகள் (Blocked contacts) இருந்தாலும் அவர்களும்  படங்களையும் வீடியோக்களையும் பார்க்க முடியும். எனினும்  அவர்கள் உங்களுக்கு செய்தி அனுப்பவோ அழைக்கவோ முடியாது. ஆனால் அவர்கள் உங்களுடன் குழுக்களில்  தொடர்பு கொள்ள முடியும்,

இருந்தாலும் ‘View Once’ அம்சத்தைப் பயன் படுத்தி அனுப்பும் செய்திகளை, ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதிகளைப் பயன்படுத்தி பெறுநரால் அவற்றை சேமிக்க முடியும் . ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை உணரும் வசதி  வாட்சப்பில் இதுவரை இல்லாதால் அது பற்றி  உங்களுக்கு வாட்சப் அறிவிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

‘View Once” இன்னும் பீட்டா நிலையிலேயே இருப்பதால் எல்லோருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது. எனினும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *