What are SuperChat & Super Stickers on Youtube?

What are SuperChat & Super Stickers on Youtube யூடியூப் சூப்பர் சாட் Super Chat என்பது படைப்பாளிகள் நேரலைக்கு வரும்போது பணமாக்க உதவும் ஓர் அம்சம். இந்த நேரலையில் பார்வையாளர்கள் படைப்பாளிகளுக்கு நன்கொடையாகப் பணம் செலுத்த முடிவதோடு தங்கள் கருத்தைப் பதிவு செய்து அதனைப் நீண்ட நேரம் திரையில் காண்பிக்கவும் அனுமதிக்கிறது.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த யூடியூபர்களை நிகழ் நேரத்தில்  அணுக உதவுவதும்,  அதேபோல் யூடியூபர்களும் தங்கள் தீவிர  ரசிகர்கள் யார் என்பதைக் அறிந்து கொள்ள உதவுவதுமே   சூப்பர் அரட்டையின் குறிக்கோள் எனக் கூறுகிறது யூடியூப்.

ஒரு யூடியூப் படைப்பாளர்  நேரலையாக லைவ் ஸ்ட்ரீம் செய்யும்போது, ​​அரட்டை விண்டோவில் ஒரு டாலர் குறியீட்டைப் பார்த்திருப்பீர்கள். இதனைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அந்த யூடியூபருக்குப்  அனுப்ப விரும்பும் டாலர் தொகையை அமைக்க உதவும் ஸ்லைடரைத் திறக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பணம் செலுத்துகிறீர்களோ, அதற்கேற்ப  உங்கள்  கருத்து எவ்வளவு நேரம்  பின் செய்யப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும் உங்கள் பின்னூட்டத்தை இட கூடுதலாக இன்னும் சில எழுத்துக்களை டைப் செய்வதற்கான இடமும் கிடைக்கும்.  யூடியூப் கிரியேட்டர்களுக்கு நீங்கள் நன்கொடையாக் அனுப்ப விரும்பும் டாலர் தொகையை நீங்களே முடிவு செய்யலாம்.

சூப்பர் சேட்டைப் போன்றே, பார்வையாளர்கள் நேரலையின்போது சூப்பர் ஸ்டிக்கர்களையும் (Super Stickers) வாங்கலாம். சூப்பர் ஸ்டிக்கர் என்பது அனிமேஷன் செய்யப்பட்ட படங்கள். அவற்றின் மூலம் பார்வையாளர்கள் நேரலையின்போது தமக்குப் பிடித்த படைப்பாளருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பவும், ஆதரவை வெளிப்படுத்தவும் முடியும். நீங்கள் வழங்கும் பணத்திற்கேற்ப சூப்பர் ஸ்டிக்கர்களும் அரட்டையில் குறிப்பிட்ட நேரம் காட்சிப்படுத்தப்படும்.

சூப்பர் சேட் மற்றும் சூப்பர் ஸ்டிக்கர்கள் என்பவை யூடியூப் படைப்பாளர்கள் தங்கள் யூடியூப் சமூகத்துடன் உறவாடும் போது தங்கள் சேனலைப் பணமாக்க மற்றுமொரு வழியை வழங்குகிறது. எனினும் ஏற்கனவே தங்களது சேனலை பணமாக்கத் (monetize) தகுதி பெற்ற யூடியூப் படைப்பாளர்களுக்கும், அதே நேரம் குறிப்பிட்ட சில நாடுகளில் வசிப்போருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது.

தகுதி பெற்ற நாடுகளின் பட்டியல்

About admin

Check Also

What is Discord and how to use it?

டிஸ்கார்ட்-Discord என்பது உரை அரட்டை-text chat, குரல் அரட்டை voice chat, வீடியோ அரட்டைvideo chat, மற்றும் கோப்பு பகிர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *