Unstoppable Copier விண்டோஸ் இயங்கு தளத்தில் சீடி டிவிடி போன்றவற்றிலிருந்து பைல்களைப் பிரதி செய்யும்போது, சேதமடைந்த இடங்களிலுள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாமல் உடனடியாக ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்து விட்டு பிரதி செய்வதை நிறுத்திக் கொள்ளும். அதற்கு மேல் நகராது. பழுதடைந்த சிடி டிவிடிக்களிலிருந்து பைல்களைப் படிக்கக் கூடிய வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் தரப் படவில்லை. எனவே இது போன்ற கீறல் விழுந்த சீடி டிவிடி பொன்றவற்றிலிருந்து பைல்களை மீட்டெடுக்கவென உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கருவியே Unstoppable Copier.
இந்த மென்பொருள் கருவி மூலம் சிடி டிவிடிக்களிலிருந்து பைல்களைப் பிரதி செய்யும்போது சேதமடைந்த இடங்களிலுள்ள பகுதி நீங்களாக ஏனைய பகுதிகளிலுள்ள டேட்டாவை தொடர்ந்து பிரதி செய்யும் இதனை www.freewarefiles.com உழஅ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்யலாம். பைல் அளவு 417 KB
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil