Telegram-latest update brings new features to the platform

Telegram-latest update brings new features to the platform டெலிகிராம் (Telegram) ஒரு புதிய அப்டேட்டை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது, இதன் மூலம் பல புதிய அம்சங்களை டெலிகிராமில்  கொண்டு வந்துள்ளது. அவற்றுள் முக்கியமான Group Video Calls 2.0 எனும் அம்சத்தில் பயனர்கள் இப்போது 1000 பார்வையாளர்களுடன் குழு வீடியோ அழைப்பைச் செய்ய முடியும். இருப்பினும் 30 பயனர்கள் மட்டுமே அழைப்புகளில் ஒரே நேரத்தில்  பங்கேற்க முடியும். ஏனையவர்கள்  அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

இந்தப் புதுப்பிப்பில் உள்ள ஏனைய சிறப்பம்சங்கள்

வீடியோ செய்திகளை முன்பை விட உயர் தரத்தில் (higher resolution) பதிவு செய்ய  அனுமதிக்கிறது.

வீடியோ பிளேயர் மூலம் வீடியோக்களை 0.5x, 1.5x மற்றும் 2x வேகத்தில் இயக்க அனுமதிக்கும். 0.2x வேகத்தையும் இது ஆதரிக்கிறது.

இருவருக்கிடையிலான  வீடியோ அழைப்புகளில் ஒலியுடன் உங்கள் மொபைல் திரையையும்  (screen sharing)  பகிர முயும். வீடியோ அழைப்பில் கேமரா மூலம் உங்கள் முகத்தையும் காட்டலாம். விரும்பினால் மொபைல் திரையையும் காட்டலாம். உதாரணமாக ஒரு வீடியோ பாடலை இயக்கி அதனை இசையோடு மறுமுனையில் உள்ள நண்பருக்குக் காட்ட முடியும்.

கேலரியில் வீடியோவை சேமிக்காமலே, நேரடியாக வீடியோவை பதிவு செய்து பகிரும் புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


அரட்டைகளில் உங்கள் செய்திகளை இப்போது ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து தானாகவே நீக்கப்படும் வகையில் அமைக்க முடியும்.

டெலிகிராம் செயலியில் உள்ள மீடியா எடிட்டர் (media editor) மூலம் இப்போது உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரைபடங்கள், உரை மற்றும் ஸ்டிக்கர்களுடன் விளக்கவும் அலங்கரிக்கவும் முடியும். ஒரு நிபுணத்துவ துல்லியத்தை வழங்கும் Precision Drawing எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது

புதிய அனிமேஷன்கள் மூலம் கடவுக்குறியீட்டு இடைமுகம் முன்பை விடச் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அண்ட்ராயிட் பயனர்களுக்காகக் குறுஞ்செய்திகள் புதிய இலகுரக அனிமேஷன்களைக் கொண்டுள்ளன – அரட்டையில் Send பட்டனை அழுத்தும்போது, உங்கள் உரைச் செய்தி, குமிழியாகச் (bubble) சீராக உருமாறும். IOS பயனர்கள் முந்தைய மேம்படுத்தலில் இந்த அனிமேஷன்களைப் பெற்றனர்.

வீடியோக்களிலோ யூடியூப் இணைப்புகளிலோ தலைப்புகள் அல்லது பதில்களில் 0:30 போன்ற நேர முத்திரையை (Timestamp)  வைத்துப் பயனர்களைச் சரியான வினாடிக்குச் செல்ல அனுமதிப்பதை நீங்கள் அறிவீர்கள. புதிய அப்டேட்டில் ஒரு வீடியோவில் நேர முத்திரையை அழுத்தி இணைப்பை Timestamp Links நகலெடுத்து மற்றொரு அரட்டையில் பகிரவும் முடியும்.

iOS சாதனங்கள் in-app camera வசதியைப் பெறுகிறார்கள். இந்த கேமரா மூலம் உங்கள் சாதனத்தில் உள்ள அனைத்து சூம் நிலைகளையும் பயன்படுத்தி வீடியோ சூம் செய்து பார்க்க முடியும்.

புதிய அனிமேஷனனுடனான எமோஜி பொதியும் இந்த டெலிகிராம் அப்டேட்டில் இணைக்கப்படுள்ளது.

WhatsApp Vs Telegram: எது சிறந்தது?

About admin

Check Also

Now You Can Edit Your WhatsApp Messages

நீங்கள் தவறு செய்யும் தருணங்களில் அல்லது உங்கள் எண்ணத்தை மாற்றினால், நீங்கள் ப்லரும் ஆவலோடு எதிர் பார்த்திருந்த அனுப்பிய செய்திகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *