Tamil Nadu School Education launches e-learning website : தமிழ்நாடு பாடசாலைகள் கல்வித் பிரிவினரால் மின் கற்றல் (e-learning) இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களைக் கற்க e-learn.tnschools.gov.in என்ற இந்தப் புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தி வீடுகளிலிருந்தே கற்கலாம். வகுப்பு (தரம்) ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான அனைத்து பாடங்களும் இவ்விணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளன. பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கின்றன.
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil