Server security certificate is not yet valid

 Server security certificate is not yet valid கூகல் க்ரோம் ப்ரவுசரைப் பயன் படுத்தி gmail, yahoo. facebook போன்ற தளங்களைப் அணுகும் போது சில வேளைகளில் அத்தளங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக படத்தில் காட்டியுள்ளது போன்ற ஒரு பக்கத்தைக் காண்பிக்கும் அப்பக்கத்தில் Server Security Certificate is not yet valid எனும் ஒரு பிழைச் செய்தியையும் காண்பிக்கும். அப்போது நீங்கள் “Proceed anyway” எனும் லிங்க்கில் க்ளிக் செய்ய மறுபடியும் அதே முடிவையே தரும். உண்மையில் இந்தப் பிழைச் செய்தி வருவதற்கு உங்கள் கணினி தவறான நேரத்தையும் திகதியையும் காண்பிப்பதே காரணம் ஆகும். எனவே கணினியில் சரியான திகதியை மாற்றியமைப்பதன் மூலம்  இப்பிழைச் செய்தியைத் தடுத்து மேற் சொன்ன தளங்களை அடைய முடியும். டாஸ்க் பாரின் வலது பக்க ஓரத்தில் காண்பிக்கப் படும் கடிகாரத்தில் இரட்டைக் க்ளிக் செய்வதன் மூலம் கணினியில் திகதியை மாற்றிக் கொள்ளலாம்.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *