13 மற்றும் 14 இரு வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாளை அடிப்படையாகக் கொண்டவை
- =$A$2+A3 எனும் சூத்திரத்தை கலம் (cell) A4 கொண்டுள்ளது. இச் சூத்திரம் கலம் A5 இற்குப் பிரதி செய்யப்பட்டால் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?
(1) 2 (2) 4 (3) 6 (4) 8 - கலம் C2 இல் =sum(A2:B2) எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. கலம் C2 இலுள்ள சூத்திரம் C3 இற்குப் பிரதி செய்யப்பட்டால் கலம் C3 இல் எழுதப்படுவது பின்வருவனவற்றுள் எது?
(1) =sum(A2:B2) (2) =sum(A3:B3) (3) =sum(B2:B3) (4) =sum(A2:A3)
(i) வேலையாள் ஒருவரின் மாதாந்தக் கொடுப்பனவை (monthly payment) அம்மாதத்தின் வரவை (attendance) நாளாந்த சம்பளக் கொடுப்பனவினால் (daily rate) பெருக்குவதன் மூலம் கணிக்கப்படும். Employee Number E0001 ஐ உடைய வேலையாளின் அக்டோபர் மாதத்திற்கான மாதக் கொடுப்பனவைக் காட்சிப்படுத்துவதற்கு கலம் E2 இல் எழுதவேண்டிய சூத்திரத்தை எழுதுக.
(ii) ஏனைய வேலையாட்களின் அக்டோபர் மாதத்துக்கான சம்பளக் கொடுப்பனவுகளைக் கணிப்பிடுவதற்குத் தேவையான படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
கலம் ………….. ஐத் தெரிவுசெய்க. .
………… இற்குரிய படவுரு (icon) இன் மேல் சொடுக்குக.
……… இலிருந்து …………. வரையான கலவீச்சினைத் தெரிவுசெய்க.
………….. இற்குரிய படவுருவின் மேல் சொடுக்குக.
A – E வரை முகப்பு அடையாளமிடப்பட்டவற்றிற்குச் சரியான பதங்களை கீழே தரப்பட்ட பட்டியலிலிருந்து தெரிவுசெய்க.
பதங்களின் பட்டியல் : ஒட்டுதல் (Paste), வெட்டுதல் (cut), பிரதி எடுத்தல் (copy), E3, E2, E151
(iii) அனைத்து வேலையாட்களுக்கும் மாதாந்த உபகாரக் கொடுப்பனவு (Bonus) வழங்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான உபகாரக் கொடுப்பனவுச் சதவீதம் (Bonus Rate) கலம் G2 இல் தரப்பட்டுள்ளது.
Monthly Payment ஐ Bonus Rate இனால் பெருக்குவதன் மூலம் உபகாரக் கொடுப்பனவு அளவு கணிக்கப்படும்.
ஏனைய வேலையாட்களுக்குரிய உபகாரக் கொடுப்பனவுகள் இச்சூத்திரத்தை ஏனைய கலங்களுக்கு பிரதிசெய்வதன் மூலம் கணிக்கப்படும் எனக் கருத்திற் கொண்டு Employee Number E0001 ஐ உடைய வேலையாளின் உபகாரக் கொடுப்பனவை கலம் F2 இல் காட்சிப்படுத்துவதற்குரிய சூத்திரத்தை எழுதுக.
(v) மேலே (iii) இல் எழுதப்பட்ட சூத்திரத்தை கலம் F3 இல் பிரதிசெய்து Employee Number E0002 இன் உபகாரக் கொடுப்பனவைக் கணிப்பதற்கான சூத்திரத்தை எழுதுக.