மூலம்: 1. தேசிய விஞ்ஞான மன்ற புள்ளிவிபரக் கைந்நூல் – 2010 2. கல்வித் தகவல்கள் – கல்வி அமைச்சு
(a) 2008 இல் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கையைப் பெறுவதற்குக் கலம் B3 இல் எழுத வேண்டிய தனி விரிதாள் சார்பு (function) யாது?
(b) கலம் B3 இல் உள்ள சூத்திரத்தைக் கலம் C3 இற்குப் பிரதிசெய்தால், C3 இற் காட்சிப்படுத்தப்படும் சார்பு யாது?
(c) அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையினால் வகுப்பதன் மூலம் “மாணவர் /ஆசிரியர் விகிதம்” (அரசாங்கப் பாடசாலைகள்) கணிக்கப்படுகின்றது. 2008 இல் மாணவர்/ஆசிரியர் விகிதத்தைக் (அரசாங்கப் பாடசாலைகள்) காட்சிப்படுத்துவதற்குக் கலம் B14 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது?
(d) தரப்பட்டுள்ள மூன்று ஆண்டுகளுக்கும் அரசாங்கப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளுக்கிடையிலான வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுவதற்கு மிகப் பொருத்தமான வரைபு வகை யாதெனப் பிரேரிக்க.
(ii) விரிதாள்கள் பற்றிய பின்வரும் கூற்றுகள் உண்மையா, பொய்யா எனக் குறிப்பிடுக.
(நீர் கூற்று எண் (a) – (f) ஐயும் உண்மை /பொய் எனவும் மாத்திரம் எழுதினால் போதுமானது.)
(a) ஒரு சூத்திரத்தை, அடுத்துள்ள கல வீச்சுக்குப் பிரதிசெய்வதற்குத் தன்னியக்க நிரம்பல் (autofill) வசதியைப் பயன்படுத்தலாம்.
(b) கலங்களில் உள்ள பாடப் பதிவுகளை (text) கொடா நிலையினால் (default) தன்னியக்கமாக வலது பக்கமாக நேர்ப்ப டுத்தப்படலாம் (right aligned),
(c) ஒரு விரிதாள் அச்சுப்படியில் (printout) கல எல்லைகளைத் (borders) தோற்றச் செய்யலாம்.
(d) ஒரு விரிதாளில் நிரைகளையும் நிரல்களையும் மறைக்கலாம்.
(e) Control + Home சாவிகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் நிலைநாட்டியைக் (cursor) கலம் A1 இற்கு நகர்த்த லாம்.
(f) Control + Page up சாவிகள் ஒன்றாக அழுத்தப்படும்போது இயக்கு கலம் (active cell) அடுத்த பணித்தாளிற்குச் செல்லும்.