18. பின்வருவனவற்றில் எவை இலத்திரனியல் தரவுத் தளங்களின் அனுகூலங்களாகக் கருதப்படுகின்றன?
A – தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு குறைந்தளவு பௌதிக இடம் தேவையாயிருத்தல்
B – பிரதிகளைப் பெறுதல் இலகு
C – தகவலை மீளப்பெறுதலில் வினைதிறன் கூடியது
(1) A மற்றும் B மாத்திரம்
(2) A மற்றும் C மாத்திரம்
(3) B மற்றும் C மாத்திரம்
(4) A, B மற்றும் C எல்லாம்
19 தொடக்கம் 21 வரையுள்ள வினாக்கள் நூலாசிரியர்கள், நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் எழுதியல் நூல்கள் ஆகியன பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாய்க் கொண்டவை.
19. நூலாசிரியர் நூல் (Author_Book) அட்டவணையின் முதன்மைச் சாவி (primary key) எதுவாகும்?
(1) AuthorID (2) BookID
(3) AuthorID + BookID (4) AuthorID + Royalty_Share
20. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A – நூலாசிரியர் அட்டவணையில் உள்ள AuthorID ஓர் அந்நியச் சாவியாகும் (foreign key).
B – நூலாசிரியர் நூல் அட்டவணையில் உள்ள AuthorID ஓர் அந்நியச் சாவியாகும்.
C – நூல் அட்டவணையில் உள்ள BookID ஒரு முதன்மைச் சாவியாகும். மேலே தரப்பட்ட கூற்றுகளில் எவை சரியானவை?
(1) A மற்றும் B மாத்திரம் (2) A மற்றும் C மாத்திரம்
(3) B மற்றும் C மாத்திரம் (4) A, B மற்றும் C எல்லாம்
21. “Mathematics with Fun” என்னும் பெயரிடப்பட்ட நூலின் நூலாசிரியர் யார்?
(1) Anil Ratnayake (2) Indika Serasinghe
(3) Sharaf Khan (4) Lalith Wijenayake
vii) கொள்வனவுத் திகதியையும் (PurchaseDate) வெவ்வேறு வழங்குநர்களினால் (Suppliers) கொள்வனவு செய்யப்பட்ட வெவ்வேறு உருப்படிகளின் (items) கணியங்களையும் (quantities) பட்டியற்படுத்தும் பகுதியளவாகக் காட்டப்பட்ட Purchase தரவுத்தள அட்டவணையைக் கருதுக.
(a) மேலுள்ள அட்டவணையில் உள்ள புலங்களினதும் பதிவுகளினதும் எண்ணிக்கையை எழுதுக.
(b) PurchaseDate மற்றும் Quantity க்கு மிகவும் பொருத்தமான தரவு வகைகளை (data types) எழுதுக.
3. ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்பார்வையாளர்கள் (Supervisors), செயற்றிட்டம் (Project) மற்றும் அம்மேற்பார்வையாளர்களினால் மேற்பார்வை செய்யப்படும் செயற்றிட்டங்கள் (Supervisor_Project) என்பன பற்றிய தகவல்களைத் தேக்கி (store) வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பகுதியளவாகக் காட்டப்பட்டுள்ள தொடர்புடைமைத் (relational) தரவுத்தள அட்டவணைகள் கீழே தரப்பட்டுள்ளன.
(i) பின்வரும் கூற்றுகள் உண்மையானவையா, பொய்யானவையா எனக் கூறுக.
(a) SupervisorID ஆனது Supervisor_Project அட்டவணையின் ஓர் அந்நியச் சாவியாகும்.
(b) ProjectID ஆனது Supervisor_Project அட்டவணையின் ஒரு முதன்மைச் சாவியாகும்.
(ii) பின்வரும் மாற்றங்களுக்கு இடமளிப்பதற்கு இற்றைப்படுத்த வேண்டிய அட்டவணை / அட்டவணைகள் யாது / யாவை?
(a) Anura Wijenayake இற்கு 10,000 கொடுப்பனவுடன் (allowance) செயற்றிட்டம் P002 இற்குரிய மேற்பார்வையாளர் பணி குறித்தொதுக்கப்பட்டுள்ளது.
(b) Pradeep Dissanayake (SupervisorlD : S06) என்ற பெயருடைய ஒரு புதிய மேற்பார்வையாளராக இரசாயனவியல் (Chemistry) திணைக்களத்தில் சேர்ந்தார். அவருக்கு 15,000 கொடுப்பனவுடன் செயற்றிட்டத்திற்குரிய (ProjectID: P003) மேற்பார்வையாளர் பணி குறித்தொதுக்கப்பட்டது.
(iii) 15/09/2020 அன்று பல்கலைக்கழகம், Mohamed Nazwar, Raj Selvam ஆகியோரை மேற்பார்வையாளர்களாகக் கொண்டு, ஒரு புதிய செயற்றிட்டத்தை (ProjectID: P006) ஆரம்பித்தது. ஒவ்வொரு மேற்பார்வையாளருக்கும் 11,000 கொடுப்பனவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறித்த மாற்றத்திற்காக உரிய அட்டவணையுடன் / அட்டவணைகளுடன் சேர்க்கப்பட வேண்டிய புதிய பதிவை / பதிவுகளை எழுதுக. ஒவ்வொரு பதிவுக்கும்
(iv) செயற்றிட்டம் P001 ஐ மேற்பார்வை செய்யும் மேற்பார்வையாளரின் / மேற்பார்வையாளர்களின் திணைக்களத்தின் / திணைக்களங்களின் பெயரை (Department Name)/ பெயர்களை தேடுவதற்குரிய ஒரு வினவலை (query) எழுதுவதற்கு இணைக்கப்பட வேண்டிய மிகப் பொருத்தமான அட்டவணைகள் யாவை?
GIT 3rd term Test NWP 2021/2022