25, 26 ஆகிய வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாள் கூறை அடிப்படையாகக் கொண்டவை.
25. கலம் C3 இல் சூத்திரம் =count(A1:B3) ஐ நுழைக்கும் போது பின்வருவனவற்றில் எது கலம் C3 இல் காட்சிப்படுத்தப்படும் ?
(1) 1 (2) 3 (3) 5 (4) 6
26. கலம் A3 ஆனது சூத்திரம் =SUM($A1:A2) ஐக் கொண்டுள்ளது. இச்சூத்திரம் கலம் B3 இற்கு நகல் செய்யப்படும் போது பின்வருவனவற்றில் எது கலம் B3 இல் காட்சிப்படுத்தப்படும் ?
(1) 5) (2) 7) (3) 11 (4) 12
OL/2016/80/T-I, II (NEW)
4. பின்வரும் விரிதாள் கூறில் 2015 ஆம் ஆண்டிற்கான மாதாந்த தேயிலை விலைகளின் பரம்பல் காட்டப்பட்டுள்ளது. (மூலம்: www.indexmundi.com) மேற்குறித்த விரிதாள் கூறைப் பயன்படுத்திப் பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.
(i) 2015 ஆம் ஆண்டிற்கான தேயிலையின் சராசரி விலையைக் கணித்துக் காட்சிப்படுத்துவதற்கு
= function1 (cell1: cell2) வடிவிலான சூத்திரமொன்று கலம் B16 இல் எழுதப்படுகின்றது. அதில் function1, cell, cell2 ஆகியவற்றுக்குரிய பதங்களை எழுதுக.
(ii) டிசெம்பர் மாதத்திற்கான சராசரி மாதாந்த தேயிலை விலையின் வித்தியாசம் பின்வருமாறு கணிக்கப்படுகின்றது. விலை வித்தியாசம் டிசெம்பர் = விலை டிசெம்பர் – விலை நவம்பர்
2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கான விலை வித்தியாசத்தைக் கலம் C15 இல் காட்சிப்படுத்துவதற்கு = function2(cell3:cell4) வடிவ சூத்திரம் எழுதப்படுகிறது. அதில் function2, cell3, cell4 ஆகியவற்றுக்குரிய பதங்களை எழுதுக.
(iii) கலம் C15 இல் உள்ள சூத்திரம் கலம் C4இற்கு நகல் செய்யப்படுமெனின் C4 இல் காட்சிப்படுத்தப்படும் சூத்திரம் யாது ?
(iv) 2015 ஆம் ஆண்டின் சராசரி மாதாந்த தேயிலை விலையின் மாறலைக் (variation) காட்டுவதற்கு விரிதாள் மென்பொருளிலுள்ள பொருத்தமான வரைபட வகைகள் இரண்டைப் பெயரிடுக.
(v) மேலே (iv) இன் விடைக்குரிய வரைபடத்தை வரைவதற்குக் கிடை அச்சில் நீர் பயன்படுத்தும் கலவீச்சு யாது?