(i) தரவு என்பது யாது?
(ii) மிகப் பெரிய கனவளவுள்ள தரவுகளைக் கையாள்வதில் உள்ள மூன்று இடர்ப்பாடுகளைப் பட்டியற்படுத்துக.
(iii) தரவுத்தளம் என்பது யாது ? தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேலே (ii) இல் குறிப்பிட்ட இடர்ப்பாடுகளை எங்ஙனம் வெல்வரெனச் சுருக்கமாக விளக்குக.
(iv) தரவுத்தளங்களைப் படைத்து, பேணி, பயன்படுத்தும் ஒரு தொகுதி மென்பொருளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுப் பெயர் யாது?
அத்தகைய மென்பொருள் பொதிகளின் இரு பிரசித்திபெற்ற உதாரணங்களைப் பட்டியற்படுத்துக.
உமது பாடசாலையின் ஆசிரியர்கள் பற்றிய தரவுகளைக் கொண்ட ஓர் எளிய தரவுத்தளத்தை அமைக்க வேண்டியுள்ளதெனக் கொள்க. தரவுத்தளத்தில் ஓர் அட்டவணையை அமைக்கப் பயன்படுத்தத்தக்க ஐந்து புலங்களைப் பட்டியற்படுத்துக.
நீர் அட்டவணையில் நுழைக்கும் இரு மாதிரிப் பதிவுகளைத் (records) தருக.