Mars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு

Mars Perseverance Photo Booth நாசா NASA  விண்வெளி ஆரய்ச்சி நிலையம் கடந்த 2020 ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோபோ ரோவரை ஏவியது “Perseverance” விடாமுயற்சி” எனும் பெயரிடப்பட்ட  எஸ்யூவி மிகவும் சிறிய  அளவிலான ரோவர் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அப்போதிருந்து, செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிற நிலப்பரப்புகளையும் சூழலையும் காட்டும் பல்வேறு படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.

Mars Perseverance Photo Booth

நாசா தங்கள் ரோவர் மூலம் எடுத்த அதிசயிக்கத்தக்க  செவ்வாய் கிரக படங்களை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதோடு, பொது மக்கள் அப்படங்களப் பின்னணியாக் கொண்டு தமது  சொந்த படங்களையும் உவாக்கக் கூடிய வசதியையும் நாசா வழங்குகிறது.

இதற்காக நாசா விண்வெளி அமைப்பு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், உங்களை செவ்வாய் நிலப்பரப்புகளின் உண்மையான படத்தில் வைக்க ஒரு பிரத்யேக மொன்பொருள் கருவியை உருவாக்கியுள்ளது.இக்கருவி “Mars Perseverance Photo Booth (செவ்வாய்க் கிரக விடாமுயற்சி புகைப்பட சாவடி” என்று அழைக்கப்படுகிறது. (Polling Booth – வாக்குச் சாவடி)

இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் “செவ்வாய் விடாமுயற்சி” என்ற வாட்டர் மார்க்கையும் நீங்கள் காணலாம். இந்த கருவி பின்னணி அகற்றலில் விளிம்பில் கண்டறிதலை (edge finding) மிகவும் வெற்றிகரமாக செய்கிறது.

நீங்களும் இக்கருவியை நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து முயற்சி செய்து பாருங்கள்,

Mars Perseverance Photo Booth

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *