கைன் மாஸ்டர் (KineMaster)- என்பது அண்ட்ரொயிட் கருவிகளுக்கான ஒரு வீடியோ எடிட்டர் செயலி. இதன் மூலம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணினி போன்ற கையடக்கக் கருவிகளில் வீடியோ படங்களை உருவாக்குதல், திருத்துதல், போன்ற பல வகையான வீடியோ எடிட்டிங் சார்ந்த செயற்பாடுகளை நிர்வகிக்க முடியும்.
கைன் மாஸ்டர் செயலியை அன்ட்ரொயிட் கையடக்கக் கருவிகளுக்கான ஒரு புரட்சிகரமான வீடியோ எடிட்டர் எனக் குறிப்பிடலாம். கூகில் ப்லே ஸ்டோரில் இச்செயலி வெளியிடப்பட்ட தினத்திலிருந்து கைன் மாஸ்டருக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்னம் உள்ளன. யூடியுப் சேனல் நிர்வகிப்போரின் விருப்பத்திற்குரிய வீடியோ எடிட்டர் செயலியாக கைன் மாஸ்டர் விளங்குகிறது.
டெஸ்க்டொப் கணினிகளில் பயன் படுத்தப்படும் தொழில்முறை சார்ந்த வீடியோ மென்பொருள்களுக்கு நிகராக கைன் மாஸ்டர் செயற்படுகிறது என்றால் மிகையல்ல. ஒரு வீடியோ திருத்தி மென்பொருளில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் இச்செயலியில் இருப்பது சிறப்பம்சம்.
மிக இலகுவாகப் பயன் படுத்தக் கூடிய இடை முகப்புடன் கிடைக்கிறது கைன் மாஸ்டர். இதன் சோதனைப் பதிப்பை Google Play Store இலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.