How to use the Clipboard in Android mobile? அண்ட்ராய்ட் ஃபோன்களில் க்லிப் போர்டைப் பயன் படுத்துவது எப்படி?அண்ட்ராய்ட் ஃபோன்களில் உரைப் பகுதிய நகலெடுத்து ஒட்டக்கூடிய வசதி என்பது ஒர் எளிய செயற்பாடுதான். எல்லோரும் அதனைப் பயன் படுத்த அறிந்து வைத்திருக்கிறோம். எனினும் அந்த வசதியை இன்னும் எளிமைப் படுத்தும் கிளிப்போர்ட் (clipboard) பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. எம்.எஸ்.வர்ட், எக்ஸல் போன்ற பாயன்பாடுகளில் க்லிப்போர்டை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடும்.
உங்கள் மொபைல் சாதனத்தின் அண்ட்ராய்ட் பதிப்பைப் பொறுத்து கிளிப்போர்டு அம்சமும் வேறுபடுகிறது. சாம்சங் மற்றும் எல்ஜி தொலைபேசிகள் அவற்றின் உள்ளமைக்கப்பட்ட கிளிப்போர்டுகளைக் கொண்டுள்ளன. எனினும் பிற நிறுவன தயாரிப்புகளில் விசைப்பலகை (keyboard) பயன்பாட்டின் மூலம் கிளிப்போர்டை அணுக முடியும்.
இங்கு விசைப்பலகை பயன்பாட்டுடன் கிளிப்போர்டைப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி விளக்கப்படுகிறது. இந்த வழி முறை அனைத்து அண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் பொருந்தும்,
முதலில், கிளிப்போர்டு அம்சத்தைக் கொண்ட விசைப்பலகை செயலியை நிறுவிக் கொள்ள வேண்டும். கூகுளின் Gboard மற்றும் Microsoft இன் SwiftKey ஆகிய இரண்டு பிரபலமான தேர்வுகள். இந்த இரண்டு பயன்பாடுகளிலும் உள்ள கிளிப்போர்டுகள் மிகவும் ஒத்ததாக செயல்படுகின்றன.
படிக்க சோம்பலாக இருந்தால் இந்த வீடியோவைப் பார்க்கலாம்
விசைப்பலகை செயலியை நிறுவி அதனை செட்டப் செய்ததும் (setup), முதலில் சில உரைப் பகுதிகளை (text) வேறு செயலிகளிலிருந்து (உதாரணம் : ஃபேஸ்புக், விக்கிபீடியா, கோரா) நகலெடுங்கள் (copy). கிளிப்போர்டு படங்களை (images) ஆதரிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
அடுத்து, நீங்கள் நகலெடுத்த அனைத்தையும் ஒட்ட (paste) விரும்பும் பயன்பாட்டிற்குச் சென்று (Whatsapp, Messages, Messenger, Facebook) , விசைப்பலகையை தோன்றச் செய்ய டைப் செய்யும் பகுதியான டெக்ஸ் பாக்ஸைத் (text box) தட்டுங்கள். அடுத்து தோன்றும் விசைப்பலகையில் டூல் பாக்ஸில் கிளிப்போர்டு ஐகானைத் தட்டுங்கள்.
கிளிப்போர்டை திறந்ததும் , நீங்கள் நகலெடுத்த உரைப்பகுதிகளை காண்பீர்கள். நீங்கள் விரும்பும் உரைப் பகுதியில் தட்டி தேவையான இடத்தில் டெக்ஸ்டை ஒட்டிக் கொள்ளலாம்.
இருந்தாலும் கிளிப்போர்டில் நடலெடுத்த உரைப் பகுதிகள் நீண்ட நேரம் தங்காது . சிறிது நேரத்திற்குப் பிறகு, கிளிப்போர்டிலுள்ள டெக்ஸ் பகுதிகள் வரிசையாக நீக்கப்படும். எனினும் அவற்றை நீக்குவதைத் தடுக்க கிளிப்போர்டில் இருக்கும் உரைப் பகுதிகளை “பின்” (Pin) செய்ய முடியும். ஒரு உரைப் பகுதியின் மீது நீண்ட அழுத்தத்தைப் பிரயோகித்து “பின்” செய்யலாம்.
மொபைல் சாதனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைப் பகுதிகளை நகலெடுத்து ஒட்டுவதற்கு, கிளிப்போர்டு ஒரு பயனுள்ள கருவி.
க்ளிப்போர்டு என்றால் என்ன?