Google Meet Can Now Be Accessed from Gmail

கூகிள் மீட் (Google Meet)  எனும்  வீடியோ கான்பரன்சிங் (conferencing) சேவை தற்போது ஜிமெயிலுடன் (Gmail)  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Gmail விண்டோவின் இடது பக்கத்தில்  Google Meet ஐப் பயன்படுத்தி ஒரு கூட்டத்தை ஆரம்பிக்க அல்லது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தில் சேரக் கூடிய  ஒரு புதிய விருப்பத்தை  ஒரு சில ஜிமெயில்  பயனர்கள் பார்க்கக் கூடியதாய் இருக்கும்.

இந்த லாக்டவுன் காலத்தில்   வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டில் பிரசித்தி பெற்ற  ஷூம் (Zoom)  செயலியிற்குப் போட்டியாக  இந்த புதிய அம்சம் ஜிமெயிலில் இணைக்கப்பட்டிருப்பதாகத்  தெரிகிறது. 

google meet
google meet

கூகுள் மீட்  முன்னர் வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திப் பெறும் சேவையாக    ஜி சூட் (G-Suit)  வழியாக கிடைத்தது.  ஆனால் தற்போது  கூகிள் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக இந்த வசதியை வழங்குகிறது.  ஒரே நேரத்தில் 100 பங்கேற்பாளர்களை இணைத்து ஹோஸ்ட் செய்யக் கூடிய வசதியை Google மீட் இலவச பதிப்பு உங்களை அனுமதிக்கிறது. எனினும் இலவச பயனர்களுக்கான சந்திப்பு வரம்பை 60 நிமிடங்கள்வரை மட்டுப் படுத்தியுள்ளது. 

கூகுல் மீட்  இனைப்பின் மூலம்  Google  பயன்பாடுகளுக்கு (Apps)  இடையில் மாறாமலேயே ஜிமெயில் விண்டோவிலிருந்தே   ஒரு கூட்டத்தை ஆரம்பிக்க அல்லது  அல்லது ஒரு கூட்டத்தில் சேர அனுமதிக்கிறது.  இந்த புதிய அம்சத்துடன் வீடியோ மீட்டிங் – ஐ  ஆரம்பிக்கும்  செயல்முறையை எளிதாக்குவதற்கு கூகுல் நிறுவனம் முயன்றிருப்பது தெரிகிறது.  

கடந்த வாரம் ஜிமெயிலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது எல்லா ஜிமெயில் விண்டோக்களிலும் பார்க்க முடியாவிட்டாலும் விரைவில் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். 

கூகுல் மீட் வசதியை  ஜிமெயில் தவிர, Chrome மற்றும் பிற இணைய உலாவிகள் மூலம் புதிதாக ப்லக்-இன்ஸ் ( plug-ins) எதுவும் செருகாமலேயே நேரடியாக அணுகவும்  முடியும்,  மேலும்  meet.google.com  எனும் இணையதள  முகவரியுடனும் அணுக முடியும்.  

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *