Google loon launched in Kenya

பிரமாண்ட பலூன் மூலம் இண்டர்நெட் Google loon launched in Kenya கூகுல்  லூன் தனது வணிக நோக்கிலான இணைய சேவையை கென்யாவில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. கென்யாவின் தொலைதூர பகுதிகளுக்கு இணைய அணுகலை வழங்க செல்போன்  சேவை கோபுரங்கள் போல் செயல்படும் பிரமாண்ட பலூன்களைப் பயன்படுத்தி இந்த இணைய சேவை கடந்த ஜுலை 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Google loon launched in Kenya இந்த லூன் இணைய சேவையை  கென்யாவின் உள்ளூர் தொலைதொடர்பு வழங்குநரான டெல்காம் கென்யாவுடன் Telkom Kenya இணைந்து வழங்குகிறது. மேலும் சுமார் 50,000 சதுர கிலோமீட்டர் (31,000 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் இந்த லூன் திட்டத்தினால் பயனடைகிறது. மலைப்பாங்கான இந்நிலப்பரப்பில் இணைய சேவை வழங்குவதற்கான உட்கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் இடர் பாடுகள் இருந்தன. கூகுல் லூன் சேவை இதற்குத் தீர்வாக அமைந்துள்ளது.

Google loon launched in Kenya : கென்யாவில் இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் லூன் இணைய சேவையை சோதிக்கத் ஆரம்பித்தது கூகுல். பல இணைய பயனர்கள் அந்த சோதனைக் காலத்தின் போது அதனை சோதனை முயற்சி என அறியாமலேயே இணையத்தைப் பயன் படுத்த ஆரம்பித்தனர்.

இந்த 4ஜி இணைய சேவை மூலம் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் அடங்களாக இணையம்  சார்ந்த அனைத்து சேவைகளை யும் பெறக் கூடியதாய் இருக்கிறது. சோதனையின் போது பதிவிறக்க வேகம் 18.9Mbps எனவும் பதிவேற்ற வேகம் 4.7Mbps எனவும் அறியப்பட்டுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் 35 பிரமாண்ட பலூன்கள் இதற்குப் பயன் படுத்தப்படுகின்றன. இந்த பலூன்கள் கடல் மட்டத்திலிருந்து 20 கிலோ மீட்டர் உயரத்தில் எப்போதும் நிலையான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் அவை அமெரிக்காவில் ஏவப்பட்டு காற்றோட்டங்களைப் பயன்படுத்தி கென்யாவுக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளன.  

இந்த லூன்  இணைய சேவையை கென்யா அல்லாத  வேறொரு  ஆபிரிக்க  நாட்டில் ஆரம்பித்திருந்தால் பயனுள்ளதாயிருக்கும் என சில விமர்சங்களும் முன் வைக்கப்படுகின்றன. ஏனெனில் கென்யாவின்  48 மில்லியன் மக்கள் தொகையில் ஏற்கனவே 39 மில்லியன் மக்கள் இணையத்தில் குடியிருக்கின்றனர்.

கூகுல் லூன் திட்டம் முதன் முதலில் இலங்கையிலேயே 2015 ஆ ஆண்டு ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும்  ஏற்கனவே இணைய  சேவை வழங்கி வரும் நிறுவனங்களின் சேவைகளுக்கு இந்த கூகுல் லூனின் அலை வரிசைகளால் குறுக்கீடுகள் வரக் கூடும் போன்ற தொழில் நுட்ப காரணங்களால்  பின்னர் இத்திட்டம் பாதியிலேயே கை விடப்பட்து சிலருக்கு நினைவிருக்கலாம்.

இந்த கூகுல் லூன் என்பது Alphabet  ஆல்ஃபாபெட் லூன் எனவும் அழைக்கப்படுகிறது.  ஆல்ஃபாபெட் என்பது கூகுள் நிறுவனர்களால் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நிறுவனமாகும், இந்த  ஆல்ஃபாபெட்  நிறுவனத்தின்  கீழ் கூகுள் நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும்  அடங்குகின்றன.  இதனை கூகுலின் தாய் நிறுவனம் எனவும்  குறிப்பிடலாம்.

tamiltech.lk

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *