Google is celebrating its 22nd birthday today

Google is celebrating its 22nd birthday | கூகுல் இன்று  தனது 22 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. வழமை போல் இன்றும்  ஒரு புதிய விசேட  கூகுல் டூடுல் (Google Doodle)  உடன்  இத்தினத்தைக் கொண்டாடுகிறது.

1998 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அன்று, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி திட்டத்தின் போது இரண்டு பிஎச்.டி மாணவர்களான செர்ஜி பிரின் (Sergey Brin) மற்றும் லாரி பேஜ் (Larry Page)ஆகியோர் “பெரிய அளவிலான தேடுபொறியின்” முன்மாதிரி ஒன்றை அமைக்கும் யோசனையுடன் முன் வந்தனர்.

Sergey Brin & Larry page

அவர்களின் திட்டம்தான் பின்னர்  உலகின் மிகப்பெரிய தேடுபொறியான  கூகுல் ஆனது

கூகுல் 2005 ஆம் ஆண்டு வரை தனது பிறந்த நாளை செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடியது. பின்னர் அது செப்டெம்பர் 8 என்றும், செப்டெம்பர் 26 என்றும் சமீப காலமாக செப்டெம்பர் 27 என்றும் அதிக விளக்கம் சொல்லாமல் மாற்றிக் கொண்டது.

கூகுளின் இன்றைய 22 வது பிறந்தநாளுக்கான கூகுல் டூடுல் வீடியோ அழைப்பைச் செய்யும் மடிக்கணினியின் முன் அமர்ந்திருக்கும் ‘G’ லோகோவைக் கொண்டுள்ளது. எனிமேஷன் செய்யப்பட்ட ‘G‘ பிறந்தநாள் தொப்பியை அணிந்துகொண்டு, ஒரு கேக் சாப்பிட்டு இணையத்தில் உலாவுவதைக் காட்டுகிறது.

கூகுல்” (Google)” என்ற வார்த்தை, “கூகோல்” (googol) என்ற கணித வார்த்தையிலிருந்து வருகிறது. இது இலக்க ம் 1 ஐத் தொடர்ந்து வரும் 100 பூஜ்ஜியங்களைக் குறிக்கும்.

“நியூ ஜெர்சியின் கூகுல் காடுகளில் நடந்து செல்லும்போது, ​​அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner எட்வர்ட் காஸ்னர் தனது இளம் மருமகன் Milton Sirotta மில்டன் சிரோட்டாவிடம் 1 ஐத் தொடர்ந்து வரும் 100 பூஜ்ஜியங்கள்” எனும் எண்ணுக்கு ஒரு பெயரைத் தேர்வு செய்ய உதவுமாறு கேட்டார். அவர் வழங்கிய பெயர்தான் கூகோல் googol என்பது. அந்த கூகோல் எனும் வார்த்தையிலிருந்துதான் கூகுல் உருவானது.

Google Doodle

2006 ஆம் ஆண்டில், ‘Google‘ என்ற சொல் அதிகாரப்பூர்வமாக ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் வினைச்சொல்லாக சேர்க்கப்பட்டது.”

கூகுல் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் (trillions) கணக்கான தேடல் வினவல்களுக்கு பதிலளிக்கிறது கூகுல்.

கூகுல் டூடுல் (Google Doodle) என்றால் என்ன?

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *