காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard
Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் கூகுல் பார்ட் (Google Bard) சேட் போட் செயலியை தற்போது உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் பயன் படுத்தக் கூடியதாக கட்டுப் பாடுகளை நீக்கியுள்ளது கூகுல்
கூகுள் பார்ட் ஐப் பயன் படுத்துவதற்கான காத்திருப்புப் பட்டியல் (wait list) சில நாடுகளில் மார்ச் 21, 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த சேவை உலகெங்கும் பரவலாகக் கிடைக்கச் கூடியதாக இருக்கவில்லை..
தற்போது கூகுல் நிறுவனம் பெரும்பாலான காத்திருப்புப் பட்டியல் கட்டுப்பாடுகளை நீக்கி, AI சாட்போட் பார்டை ஆங்கிலத்தில் மே மாதம் 10 ஆம் திகதி முதல் உலகெங்கும் பரவலாகக் கிடைக்கச் செய்வதாக அறிவித்தது.
கூகுல் Bard என்பது இயற்கையான மொழியில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு Chat GPT போன்ற சாட்போட் ஆகும்.