Facebook photo and video now supports Dropbox and Koofr

Facebook photo and video கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பேஸ்புக் பயனர்கள் பதிவேற்றிய படங்களையும் வீடியோவையும் Google Photos ற்கு எக்ஸ்போட் செய்வதற்கான வசதியை உலகளவில் அறிமுகப்படுத்தியது.

தற்போது , Google Photos  மட்டுமல்லாது டிராப்பாக்ஸ் Dropbox மற்றும் கூஃப்ர் Koofr  க்லவுட் ஸ்டொரேஜ்களிலும்  இதே வசதியை வழங்குவதாக  ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் இனி  ஒரு சில கிளிக்ஸில் Google Photos, Dropbox மற்றும்  Koofr சேவைகளுக்கு   மாற்றிவிட முடியும்.

புதிய சேவையின்   தனியுரிமை மற்றும் பாதுகாப்பை (privacy and security) பேஸ்புக் உறுதியளிக்கிறது. உங்கள் உள்ளடக்கத்தை நகர்த்துவதற்கான தெரிவை தேர்வுசெய்ததும் உங்கள் ஃபேஸ்புக் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள் . ஒரு சேர்வரை தேர்ந்தெடுத்த பிறகு, தற்காலிக கணக்கு இணைப்பை உருவாக்க உங்கள்  ட்ரொப்பாக்ஸ் அல்லது கூஃப்ருக்கான கடவுச்சொல்லை வழங்க வேண்டும். உங்கள் தரவுகள் பின்னர் மறை குறியாக்கம் (encrypt) செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைக்கு மாற்றப்படும்.

இவ்வாறு படங்களையும் வீடியோக்கலையும் மாறற  ஆரம்பிக்கும் போது அனைத்து செயல்பாடுகளும் உங்கள் தலையீடு இல்லாமல் பின்னணியில இயங்கும்.  எனவே இந்த மாற்றும் செயற்பாடு முடியு மட்டும்  நீங்கள் ஃபேஸ்புக்கை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டியதில்லை.

Facebook photo and video

மாற்றும் செயற்பாடு முடிந்ததும், உங்கள் ட்ராப்பாக்ஸில் “Photo Transfer”  எனும் கோப்புறை தோன்றும். கூஃப்ரிலும் இதே வழிமுறைதான்.  எனினும் உங்கள் படங்கள்  ’Data transfer’   என்ற கோப்புறையில் வைக்கப்படும்.  

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *