Block Diagram of the Computer System

உள்ளீட்டு அலகு (Input Unit)

கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி

வருவிளைவு அலகு (Output Unit)

செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும்.

வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.  உதாரணம்:- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி,

மைய முறைவழி அலகு  (CPU – Central Processing Unit)

மைய முறைவழி அலகு  3  பிரதான பகுதிகளைக் கொண்டது

கட்டுப்பாட்டு அலகு Control Unit
எண்கணித, தர்க்க அலகு Arithmatic & Logical Unit
நினைவகப் பதிவகம் Registers

கட்டுப்பாட்டு அலகு Control Unit

கணினியின் எல்லாக் கட்டுப்பாட்டுப் பணிகளும் இவ்வலகின் மூலம் மேற் கொள்ளப்படுகின்றன. தேவையான சந்தர்ப்பங்களில் அவசியமான விதத்தில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் எல்லாப் பகுதிகளையும் கட்டுப்படுத்தல் இவ்வலகின் மூலமே நடை பெறுகின்றது.

எண் கணித, தர்க்க அலகு Arithmetic & Logical Unit

எண்கணித செயற்பாடுகளும்  தர்க்கச் செயற்பாடுகளும்  இவ்வலகிலேயே  நடை பெறுகின்றன.

பிரதான நினைவகம் Main Memory

கணிப்புகளுக்காக அல்லது செயற்பாடுக்கு உட்படுத்துவதற்காக  மைய முறைவழி அலகிற்கு அனுப்பத் தயார் செய்யப்பட்டுள்ள தரவுகளையும் மைய முறைவழி அலகிலிருந்து புறத்தே வழங்கப்படும் தகவல்களையும் தற்காலிகமாக வைத்திருப்பதற்குப் பிரதான  நினைவகம் பயன்படுகிறது.

கணினியின் பிரதான நினைவகமாக RAM (Random Access Memory தற்போக்கு அணுகல் நினைவகம்) தொழிற் படுகிறது. இது ஒரு தற்காலிகமான நினைவகமாகும். இங்கு தரவுகள் மின் இணைப்பு இருக்கும் போது மட்டுமே தங்கியிருக்கும். மின் இனைப்பு துண்டிக்கப்படும் போது பிரதான நினைவகத்திலிருந்து அனைத்து தரவுகளும் இழக்கப்படும்.

துணை நினைவகம் Secondary Memory

பிரதான நினைவகத்தில் தரவுகள் தற்காலிகமாகவே தங்கியிருக்கும். எனினும் அத்தரவுகளை எதிர் காலத் தேவைகளுக்கும் பயன் படுத்த வேண்டுமானால் அதனை நிரந்தரமாக ஓரிடத்தில் தேக்கி வைக்க வேண்டும். அவ்வாறு நிரந்தரமாக தரவுகளைத் தேக்கி வைக்கும் அலகே துணை நினைவகம் ஆகும். இத்தேவைக்குப் பயன் படும் சாதனங்களை துணை தேக்கச் சாதனங்கள் (Storage Devices) எனப்படும். உதாரணம் hard disk, CD, DVD

About admin

Check Also

IT Related Social Issues

தகவல்  தொழில்நுட்பம் தொடர்பான சில சமூகப் பிரச்சினைகள்