Autorun Eater


கணினி இயக்கத்தைப் பாதிக்கும் அதிக எண்ணிக்கையிலான மெல்வெயர்கள் (Malware) பென் ட்ரைவ் போன்ற ரிமூவவபல் மீடியா மூலம் பரவுகின்றன. autorun.inf எனும் பைலைப் பயன் படுத்தி இந்த மெல்வயர்கள் பரப்பப்படுகிறன.
இந்த மெல்வெயரினால் பாதிக்கப்பட்ட ஒரு பென் ட்ரைவை கணினியில் நுளைக்கும்போது ஓட்டோரன் பைலானது ஒடோ-ப்லே மெனுவைக் காண்பிக்கிறது. அதனை திறப்பதால் எற்படும் விபரீதத்தை உணராத ஒரு கணினிப் பயனர் உடனடியாக அதனை ஓகே செய்து விட எமது கணினியிலும் இந்த மெல்வெயார் புகுந்து விடுகிறது. அல்லது அந்தப் பென் ட்ரைவை இரட்டைக் க்ளிக் செய்து திறக்க முற்படும்போது கூட மெல்வெயர் நமது கணினியில் பிரவேசிது விடும்.
அனேகமான மெல்வெயர் எதிர்ப்பு மென்பொருள்கள் இவற்றைக் கண்டறிந்ததுமே உடனடியாக நீக்கிவிடும். எனினும் இந்த ஓட்டோரன் பைலை மட்டும் விட்டு வைக்கும்.
எனவெ இது போன்ற விபரீதங்களைத் தவிர்க்கு முகமாக நமக்கு உதவுகிறது Autorun Eater எனும் மெல்வெயர் எதிர்ப்பு மென்பொருள் கருவி. இதன் மூலம் பென் ட்ரைவ் போன்ற ரிமூவபல் ட்ரைவிலிருந்து மட்டுமல்லாமல் ஹாட் டிஸ்கிலிருந்தும் சந்தேகத்துக்குறிய autorun.inf பைல்களைப் பரிசோதித்து நீக்கி விட முடிகிறது.
இந்த ஒட்டோரன் ஈட்டரை www.softpedia.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.-அனூப்-

 

About admin

Check Also

What is DOS?  

What is DOS? Disk Operating System “டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்” என்பதன் சுருக்கமே  DOS.  ஐபிஎம்-மற்றும் அதற்கு இணக்கமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *