Adobe Scan Android App
Adobe Scan Android App

Adobe Scan Android App அடோபி ஸ்கேன் – Tamil

Adobe Scan Android App  : அடோபி ஸ்கேன் (Adobe Scan) என்பது நேரடியாக ஆவணங்களை ஸ்கேன்  செய்யும்  கையடக்கக் கருவிகளுக்கான ஒரு (Android App) செயலியாகும்.  இது வணிக அட்டைகள் (Business cards , வைட் போர்ட் (white board) எனும் வெண் பலகைகள்  மற்றும் கடிதங்கள் போன்ற  பலவகையான  ஆவணங்களை ஸ்கேனர் கருவி இல்லாமலேயே சிறப்பாக ஸ்கேன் செய்ய உதவுகிறது.

Adobe Scan Android App
Adobe Scan Android App

நீங்கள் ஸ்கேன்  செய்ய விரும்பும் பெரும்பாலான ஆவணங்களை அடோபி ஸ்கேன் தானாகவே அடையாளம் காண்கிறது. உங்கள் தொலைபேசி கருவியை சரியான திசையில் சுட்டிக்காட்டினால் போதும நீங்கள் எதையும் அழுத்தவோ அல்லது சரிசெய்யவோ தேவையில்லாமல் அடோபி ஸ்கேன் உங்கள் ஆவணத்தைப் படம்  பிடிக்கும். நீங்கள் படத்தை எடுத்தவுடன், அதனை மேம்படுத்துவதற்கான பல கருவிகள் செயலியில் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் விரும்பினால் அதனை  திருத்தியமைக்கலாம். .

மேலும், அடோப் ஸ்கேன் Adobe Scan Android App பல கோப்புகளை வெவ்வேறாக ஸ்கேன்  செய்து அவற்றை ஒன்று சேர்த்து ஒரே pdf கோப்பாக மாற்றியமைக்கக் கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

அத்துடன்  வணிக அட்டைகளை ஸ்கேன் செய்து, அவற்றிலுள்ள தொலைபேசி இலக்கங்களை  உங்கள் தொலைபேசியின் தொடர்புப் பட்டியலில்  எளிதாக சேமிக்கவும் முடியும். ஸ்கேன் செய்யும் படத்திற்கு பதிலாக அதிலுள்ள உரைப் பகுதியை (text)  மாத்திரம் பிரித்தெடுக்க விரும்பினால் (OCR) Optical Character Recognition தொழிநுட்பத்தைப் பயன் படுத்தி பிரித்தெடுக்கவும் முடியும்.

போட்டொஷாப் பிரீமியர் இல்லஸ்ட்ரேட்டர் போன்ற மென்பொருள்கள விருத்தி செய்யும் பிரபலமான அடோபி நிறுவனத்தின் தயாரிப்பான அடோபி ஸ்கேன் செயலி அண்ட்ராயிட் மற்றும்  ஐ.ஓ.எஸ் (IOS) கருவிகளுக்கென இலவசமாகவே கிடைக்கிறது.

அடோப் ஸ்கேன் செயலி இருந்தால் போதும் வீட்டில் தனியாக ஸ்கேனர் கருவி அவசியமேயில்லை.

About admin

Check Also

Hoote-Voice Based Social Media App

Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *