உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில் , PPP என ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன.
- சாம்பல் நிற (single grey check) P – உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
- சாம்பல் நிற (double grey check) PP உங்கள் செய்தி உரியவரை அடைந்து விட்டது
- நீல நிற (double blue check) PP உங்கள் செய்தி உரியவரால் படிக்கப்பட்டு விட்டது
நீங்கள் அனுப்பிய செய்தி எனக்குக் கிடைக்கவிலை, பார்க்கவில்லை என்றெல்லம் சொல்லி நண்பர் இனிமேல் உங்களை ஏமாற்ற முடியாது.