விமானப் பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவுமுகமாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூகில் அறிமுகமப்படுத்திய. கூகில் ப்லைட்ஸ் Google Flights சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதன் மூலம் விமானப் பயனங்களைத் திட்டமிடக் கூடியதாயிருந்தது. தற்போது இந்த Google Flights சேவை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ‘கூகுள் ப்ளைட்ஸ்’ தளத்தில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாள், புறப்படும் விமான நிலையம் செல்ல வேண்டிய இடம் என்பவற்றை தெரிவு செய்து விட்டால் போதும். இங்கு பயணம் செய்ய விரும்பும் விமான சேவை நிறுவனத்தைக் குறிப்பிட வேண்டியதில்லை.
அப்போது உங்கள் பிரயாணத்துக்கான எல்லா விமான சேவைகளின் கட்டணங்கள், நேரங்கள் குறித்த தகவல்களை காண்பிக்கும். அவற்றிலிருந்து நீங்கள் பயனம் செய்ய விரும்பும் விமான சேவையினைத் தெரிவு செய்வதன் மூலம் குறித்த விமான சேவை நிறுவனத்தின் இணைய தளத்திற்குப் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் டிக்கெட் கட்டணம் குறையவோ அல்லது அதிகரிப்பதற்கோ வாய்ப்புக்கள் இருப்பின் அவை பற்றியும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்து விடுகிறது. இந்த வசதிகள் மூலம் குறைந்த செலவில் விமான சேவையை அறிந்து திட்டமிடவோ பயணிக்கவோ முடிகிறது.