பேஸ்புக் தளத்தில் உள்ள வெறுப்பூட்டும் விடயமாக திடமான ஒருதேடற் கருவி ((Search tool)) இல்லாமையைக் குறிப்பிடலாம். பேஸ்புக்கில் முன்னர் பார்வையிட்ட ஒரு சிறந்த பதிவை, கட்டுரையை அல்லது வீடியோவை இன்னொரு நாளில் மறுபடியும் பார்க்க நினைத்தால் அதனைத் தேடிக் கண்டு பிடிப்பது இயலாத காரியம் என்றே சொல்லவேண்டும். எனினும் சில உபாயங்களைப் பயன்படுத்தி நண்பர்களின முக்கியமான பதிவுகளை அவர்களின் பேஸ்புக ;பக்கத்திற்குப் போய் டைம் லைனில் மவுஸின் ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும் அழுத்தி ஆராயாமல் இலகுவாகக் கண்டு பிடிக்கக்கூடிய வழிகளும உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக்தளத்தில ;“save” எனும ;சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வசதி மூலம் நீங்கள் பேஸ்புக் தளத்தில ;பார்வையிடும் முக்கிய விடயங்களை தனியாக ஒருபகுதியில் சேமித்துக் கொள்ளலாம். இந்த ;“save” வசதி கணினிகளில் ;மட்டுமல்லாது கையடக்கக் கருவிகளுக்கான பேஸ்புக் செயலியிலும் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பேஸ்புக் தளத்தில் பார்வையிடும் ஏதோ ஒரு பதிவின் வலது பக்க மேல் மூலையில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை க்ளிக ;செய்யுங்கள் அப்போது தோன்றும் சிறிய மெனுவில் அப்பதிவின் உள்ளடக்கத்திற்கேற்ப “save video”, “ save post”, “save link” எனத் ;தெரிவுகள் தோன்றும். அத்தெரிவுகளில் க்ளிக ;செய்யும் போது Added to Saved எனும் செய்தியுடன் சேமிக்கப்பட்டுவிடும். இவ்வாறு நீங்கள் சேமித்த பதிவுகளை மறுபடி பார்வையிட வேண்டுமானால் பேஸ்புக்தளத்தின் இடப்புறம ;உள்ள பகுதியில் Saved எனும இணைப்பில் க்ளிக் செய்து பார்வையிடலாம்.