கணினி விசைப்பலகையின்; வலது பக்க மேல் மூலையில் Sys Rq, Scroll Lock, and Pause / Break என மூன்று விசைகள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில கணினி விசைப்பலகையில் இருந்து இந்த விசைகள் நீக்கப்ட்டிருந்தாலும் அனேக புதிய விசை விசைப் பலகைகளிலும் கூட இன்னும் அவை காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் பயன் பாடு என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை.
Sys Rq,
Sys Rq, விசை என்பது ளுலளவநஅ System Request என்பதன் சுருக்கமாகும். இந்த Sys Rq விசை தற்போதைய விசைப்பலகைகளில் Print Screen விசையுடன் சேர்ந்திருக்கும். (Print Screen விசையின் பயன் பாடு என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்) முன்னர் இந்த ளுலளசுங விசை இயங்கு தளம் ஒன்றின் கீழ் மட்ட ((low level) ) பணிகளைச் செயற் படுத்தப் பயன் படுத்தப்பட்டது.
இந்த ளுலளசுங விசை மெயின் ப்ரேம் கணினிகளில் பிரதான கணினியின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பயன் படுத்தப்படுகிறது விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்கு எந்தம் பயன் பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. லினக்ஸ் இயங்கு தளத்தில் ஏற்படும் வழுக்களை இனம் காணவும் இந்த விசை பயன் படுவதுண்டு. எனினும் பொதுவாக அனேக இயங்கு தளங்கள் தற்போது இந்த விசையைப் பயன் படுத்துவதில்லை என்றே சொல்ல வேண்டும்.
Scroll Lock
ஸ்க்ரோல் லொக் என்பது Caps Lock மற்றும் Num Lock போன்ற அழுத்தும் போது நிலைமாறும் (toggle) ஒரு விசையாகும். இதனை அழுத்தும் போது விசைப் பலகையின் வலது பக்க மேல் மூலையில் ஒரு LED விளக்கு எரிவதையும் அவதானிக்கலாம்.
இந்த விசையும் எம்.எஸ்.டொஸ் போன்ற எழுத்து சார்ந்த (டெக்ஸட்;) பயன் பாடு அதிகம் கொண்ட சூழலுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கணினித் திரையில் மொத்த டெக்ஸ்ட் பகுதியைக் காண்பிக்க போதிய இடம் இல்லாதபோது அம்புக் குறியிட்ட விசைகளைப் பயன் படுத்துவதன் மூலம் திரையில் கர்சரை நகர்த்தி எழுத்துக்களைப் படிக்கவோ டைப் செய்யவோ முடியும். எனினும் கர்சரை நகர்த்தாமல் இந்த ஸ்க்ரோல் லொக் விசையை ஒரு முறை அழுத்தி இயங்க வைத்து அம்புக் குறி விசைகளை மேலும் கீழும் அழுத்தும்போது திரையில் உள்ள எழுத்துக்கள் மேலும் கீழும் நகர்த்த முடியும். அதாவது ஸ்க்ரோல் லொக் விசை இயங்கு நிலையில் இருக்கும் போது அம்புக் குறி விசைகளை மேலும் கீழும் நகர்த்தும் போது கர்சர் நகராமல் திரையின் உள்ளடக்கம் மாத்திரம் மேலும் கீழும் நகர்வதை அவதானிக்கலாம்.
ஸ்க்ரோல் லொக் விசை பயன்படுத்தப்படும் ஒரு செயலிக்கு உதாரணமாக எம்.எஸ்.எக்சலைக் குறிப்பிடலாம். எக்ஸலில் ஸ்க்ரோல் லொக் விசையை அழுத்தியதும் எக்ஸல் விண்டோவின் கீழ் பகுதியில் ஸ்க்ரோல் லொக் இயங்கு நிலையில் இருப்பதைக் காண்பிக்கும். அப்போது அம்புக் குறி விசைகளை எத்திசையில் அழுத்தினாலும் தெரிவு நிலையிலுள்ள செல் நகர்வதற்குப் பதிலாக பணித்தாள் (work sheet) நகர்வதைக் காணலாம்.
எனினும் தற்கால வரைகலை இடைமுகப்புக்களில் உள்ள ஸ்க்ரோல் பார் மற்றும் மவுஸில் உள்ள ஸ்க்ரோல் வீல் என்பன இந்த விசையின் தேவையை இல்லால் செய்து விட்டன.
Pause / Break
Pause எனும் விசை MS-DOS இயக்கச் சூழலில் பயன் படுத்தப்பட்டதோடு இன்னும் இந்த விசை கமாண்ட் ப்ரொம்ப்டிலும் (Command Prompt) பயன்; படுத்தப்படுகிறது. டெக்ஸ்டை வருவிளைவாகத் தரும் செயலிகளில் Pause விசையை அழுத்தும் போது மேல் நோக்கி நகரும் டெக்ஸ்ட் நிறுத்தப்படும். மேலும் சில கணினி செய்நிரலாக்க மொழிகளிலில் ஒரு செய்நிரலின் இயக்கத்தை நிறுத்தவும் இந்த விசை பயன் படுகிறது. Pause விசை பயன் பாட்டுக்கு சிறந்த உதாரணமாக கணினியை இயக்கியதும் தோன்றும் பூட்டிங் செயற்பாட்டின் போது வேகமாகத் தோன்றி மறையும் செய்தியை நிறுத்தி வாசிக்கவும் Pause விசை உதவுவதைக் குறிப்பிடலாம்.
Break விசை எம்.எஸ்.டொஸ். இயங்கு தளத்தில் ஒரு செயலியின் இயக்கத்தை நிறுத்தப் பயன் படுகிறது. இதற்கு கண்ட்ரோல் விசையுடன் டீசநயம விசையைச் சேர்த்து அழுத்த வேண்டும்.
எம்.எஸ்.எக்ஸலில் ஸ்க்ரோல் லொக் விசையின் பயன்பாடு தவிர இந்த Sys Rq, Scroll Lock, and Pause / Break விசைகளின் பயன்பாடுகள் அனைத்தும் தற்போது வழக்கொழிந்து விட்டன. ஒரு சாதாரண கணினிப் பயனருக்கு இந்த விசைகளினால் எந்தப் பயனும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.