What are Facebook’Stars’? பேஸ்புக் ஸ்டார்ஸ் (நட்சத்திரங்கள்) என்பது என்ன? ஃபேஸ்புக் ஸ்டார்ஸ் என்பது உங்கள் கேமிங் லைவ் ஸ்ட்ரீம் (Gaming Livestream Video) வீடியோவை பணமாக்க-monetize) அனுமதிக்கும் அம்சமாகும். இது யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருக்கும் “சூப்பர் அரட்டை (Super Chat)” போன்றது.
நீங்கள் நிகழ் நேரத்தில் கேமிங்- Gaming லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும்போது பார்வையாளர்கள் ஃபேஸ்புக்கிடமிருந்து ஸ்டார்ஸ்ஸைப் பணம் செலுத்தி வாங்கி லைவ் ஸ்ட்ரீம் செய்பருக்கு நன்கொடையாக வழங்குவார். அவர் பெறும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், பேஸ்புக் அவருக்கு 0.01 அமெரிக்க டாலர் வழங்கும்.
இது படைப்பாளர்களுக்கு (Creators) பணம் ஈட்டும் ஒரு புதிய வழியையும், அவர்களைப் பாராட்ட ரசிகர்களுக்கு ஒரு புதிய வழியையும் காண்பிக்கிறது. இதனால் ரசிகர்களுக்கு என்ன பயன் என்றால் எதுவுமிலை.
நீங்கள் வழமையாகப் பேஸ்புக்கில் பதிவிடும் வீடியோவிலிருந்து நேரடி கேமிங் லைவ் ஸ்ட்ரீம் வீடியோ வேறுபட்டது. இது உங்கள் பார்வையாளர்களுடன் நிகழ் நேரத்தில் ஈடுபட உதவுகிறது.
பேஸ்புக் நிறுவனம் கேமிங் பிரியர்களுக்காவே தனியான ஒரு செயலியை கடந்த வருடம் ஃபேஸ்புக் கேமிங் Facebook Gaming எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்
பார்வையாளர் லைவ் ஸ்ட்ரீம் செய்பருக்கு ஸ்டார்ஸை அனுப்பும் ஒவ்வொரு தடவையின் போதும் அரட்டை Chat) பகுதியில் அதுபற்றிய அறிவித்தலைப் பெறுவார். அதே போன்று ஸ்டார்ஸை வழங்கும் பார்வையாளரின் பின்னூட்டமும் தனித்து நிற்கும். அதாவது ஹைலைட் செய்து காண்பிக்கப்படும்.
மேலும் ரசிகர்கள் ஸ்டார்ஸை நன்கொடையாக வழங்கும்போது, வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் அதை நிகழ் நேரத்தில் பார்ப்பார்கள்.
ரசிகர்கள் ஸ்டார்ஸை “தொகையாக வாங்கி அனுப்புவதுமுண்டு. உதாரணமாக, ஒரு ரசிகர் 100 ஸ்டார்ஸை வழங்கினால், வீடியோ படைப்பாளர் / லைவ் ஸ்ட்ரீம் செய்பவர் $ 1.00 பெறுவார்.
பேஸ்புக்கில் ஒரு வீடியோ ஸ்ட்ரீமராக ஒரு ஸ்டார்ஸ்-ஐப் பெறத் தகுதி பெறுவதற்கு. பின்வரும் அடைவுகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- ஒரு கேமிங் வீடியோ கிரியேட்டர் பேஸ்புக் பக்கம் (Gaming facebook Page) உங்களிடம் இருக்க வேண்டும்.
- கடந்த 14 நாட்களில் குறைந்தது நான்கு மணிநேரம் வீடியோ கேமிங் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்திருக்க வேண்டும்.
- கடந்த 14 நாட்களில் குறைந்தது இரண்டு நாட்களில் வீடியோ கேமிங் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்திருக்க வேண்டும்.
- குறைந்தது 100 பேராவது உங்கள் பக்கத்தைப் பின்தொடர வேண்டும்.
- தகுதியுள்ள நாட்டிலிருந்து ஸ்ட்ரீம் செய்தல் வேண்டும். (அண்மையில் இலங்கையும் தகுதி பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.)
இந்தத் தகுதிகளைப் பெற்றவுடன், ஒருவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்யும்போது அவரது ரசிகர்களிடமிருந்து ஸ்டார்ஸைப் பெறலாம்.
பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலோ பிரமிப்பூட்டும் வகையிலோ படைப்புகளை உருவாக்க வேண்டியது படைப்பாளரின் பொறுப்பு.
மாத இறுதியில் அனைத்து ஸ்டார்ஸும் கணக்கிடப்படும், குறைந்தது 10,000 ஸ்டார்ஸ் அல்லது 100 அமெரிக்க டாலர்களை எட்டும்போது, 30 நாட்களுக்குப் பிறகு படைப்பாளர் கட்டணத்தைப் பெறுவார். அவர் தற்போது வசிக்கும் நாட்டைப் பொறுத்து பே-பால் (Pay-Pal) ஊடாக அல்லது வங்கிக் கணக்கிற்குப் பணம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் அனுப்பப்படும்.
தங்களுக்குப் பிடித்த படைப்பளர்களுக்கு நன்கொடை வழங்க விரும்பும் ரசிகர்களும் Pay-Pal மூலமோ அல்லது வங்கிக் கணக்கட்டைகள் மூலமோ ஸ்டார்ஸை வாங்க முடியும்.
Stars | Value |
1 Stars | $0.01 |
100 Stars | $1.00 |
1,000 Stars | $10.00 |
10,000 Stars | $100.00 |
100,000 Stars | $1,000.00 |
1,000,000 Stars | $10,000.00 |