பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பர்களின் ப்ரொபைல், டைம் லைன் மற்றும் பதிவுகளை அவர்களின் பெயரின் மீது க்ளிக் செய்து அவ்வப்போது நீங்கள் பார்வையிடுவது போல் உங்கள் நண்பர்களும் உங்களோடு இதுவரை நட்பில் இணையாதவர்களும் கூட உங்கள் ப்ரொபைல் மற்றும் டைம் லைனை பார்வையிடலாம். அவ்வாறு யாரெல்லாம் உங்கள் டைம் லைனை பார்வையிட்டார்கள் என்பதைக் பேஸ்புக் நேரடியாக எம்மிடம் காண்பிக்காவிட்டலும் சில உபாயங்களுடன் அதனைக் இலகுவாகக் கண்டு பிடுடிக்க முடியும். .அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில், பேஸ்புக் தளம் சென்று, உங்களுடைய கணக்கினுள் லொக் இன் செய்து கொள்ளுங்கள்.. உங்கள் தளம் ‘டைம்லைன்’ பக்கத்தில் லிங்க் ஏதுமில்லாத ஒரு வெற்றிடத்தில் ரைட் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய மெனுவில் View Page Source என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு புதிய டேப் திறந்து அதனுள் HTML குறிமுறைகளுடன் கூடிய ஒரு நீண்ட பக்கம் கிடைக்கும். அந்தப் பக்கத்தினுள் Ctrl + F விசைகளை ஒரே நெரத்தில் அழுத்துங்கள். அப்போது வலது பக்க மேல் மூலையில் ஒரு தேடற் கட்டம் தோன்றும். அங்கு, “initialchat” எனும் சொல்லை மேற்கோள் குறியீடுகளின்றி டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். அப்போது இந்த தேடற் சொல்லின் கீழ் ஏராளமான இலக்கங்கள் காண்பிக்கப்படும். அந்த ஒவ்வொரு இலக்கமும் உங்கள் ப்ரொபைலைப் பார்வையிட்ட நண்பர்களின் பேஸ்புக் அடையாள இலக்கமாகும். இந்த இலக்கங்களில் ஒன்றைப் பிரதி செய்து பிரவுசரில் புதிய டேப் ஒன்றைத் திறந்து அங்கு முகவரிப் பட்டையில் www.facebook.com/ என டைப் செய்து அதனைத் தொடர்ந்து பிரதி செய்த இலக்கத்தையும் பேஸ்ட் செய்து எண்டர் விசையை அழுத்த உங்கள் பேஸ்புக் தளத்தினை பார்வையிட்ட நண்பரின் பேஸ்புக் பக்கம் பெயருடன் காண்பிக்கும்.