Google Timer கூகில் தரும் Timer வசதி
கூகில் தேடற் பொறியில் தேடற் பெட்டியில் ten minute timer என டைப் செய்து Search பட்டனைத் தட்டுங்கள் உடனே 10 நிமிட நேரங் அளவைக் கடிகாரம் ( ) தோன்றி பத்து நிமிடத்தில் ஆரம்பித்து கீழ் நோக்கி இரங்கு வரிசையில் ஓட ஆரம்பிக்கும் . மேலும் இங்கு ten minute timer என்பது போல விரும்பிய நேர அளவை டைப் செய்து கொள்ள முடியும். அதே போல் பக்கத்தில் ஒரு நிறுத்தற் கடிகாரத்துக்கான (Stop Watch) பட்டனும் தோன்றும் . அதன் மேல் க்ளிக் செய்து நிறுத்தற் கடிகாரத்தையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.