How to find your password from the browser

How to find your password from the browser பிரவுஸர் பாஸ்வர்டைக் கண்டு பிடிக்கக் கூகுல் க்ரோம், மொசில்லா ஃபயபொக்ஸ், போன்ற வெப் பிரவுஸர்கள் அனைத்தும் நாம் வழங்கும் அவ்வப்போது வழங்கும்  கடவுச் சொற்களைச் சேமித்து விடும் வசதியையும் கொண்டுள்ளன. அதாவது ஜிமெயில், பேஸ்புக், ட்ரொப்பொக்ஸ் போன்ற இணைய கணக்குகளுக்குரிய பாஸ்வர்ட்களை எமது சொந்தக் கணினியில் சேமித்து விடுவதன் மூலம் அக்கணக்குகளுக்கு மறுபடியும் செல்ல வேண்டிய தேவையேற்படும்போது லொக் இன் செய்வதற்கு மீண்டும் மீண்டும் பாஸ்வர்ட் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.  சேமிக்கப்பட்ட பாஸ்வர்டை பிரவுஸர் இனம் கண்டு தானாகவே  லொக் இன் செய்து விடும்.

How to find your password from the browser

மேலும் பிரவுசர்கள் இப்  பாஸ்வர்டுகளை பிறர் கண்ணில் படாத வண்ணம் நட்சத்திரக் குறியீடுகளாக மறைத்து விடும்,. எனினும் சில நாட்கள் கடந்த பின்னர் இதே பாஸ்வர்ட்களை நாம் மறந்து விடவும் கூடும். அவ்வாறு லொக் இன் படிவத்தில் வழங்கும் பாஸ்வர்டை மறந்து விட்டால்  டெவலப்பர் டூல்ஸ் developer tools  பயன் படுத்திக் கண்டு பிடிக்கும் வசதியையும் பிரவுஸர்கள் தருகின்றன.  அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

பிரவுஸரில் பாஸ்வர்ட் டைப் செய்யுமிடத்தில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Inspect Element தெரிவு செய்யுங்கள். அப்போது document Inspector   எனும் விண்டோவைத் திறக்கும். அங்கு நீங்கள் காணும் HTML குறியீடுகளிடையே “Password” எனும் வார்த்தையத் தேடுங்கள். அதனைத் தேடுவது கடினமாயிருந்தால் ctrl + F   (Find) விசைகளை அழுத்தியும் தேடாலம். தேடிய பின்னர் “Password” எனும் வார்த்தைக்குப்  பதிலாக “text”   எனும் வார்த்தையைப் பிரதியீடு செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள். அப்போது பிரவுஸர் விண்டோவில் பாஸ்வர்ட் டைப் செய்யப்படும் இடத்தில் நட்சத்திரக் குறியீட்டுக்குப் பதிலாக மங்களான எழுத்தில்  பாஸ்வர்டைக் காண்பிக்கும்.

About admin

Check Also

Read WhatsApp messages without opening the App

Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப்  செயலியைத்  திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி? வாட்சப்பில்  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *