குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வாட்சப் குழுமங்கள் எமக்குப் பெரிதும் உதவுகின்றன.
ஆனால் சில வாட்சப் குழுமங்களின் அட்மின்கள் பொருள்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நோக்கிலோ அல்லது செய்திகளைப் பரப்பும் நோக்கிலோ அதிக அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்காக இந்தக் குழுக்களில் பெரும்பாலும் பயனர்களின் அனுமதியின்றி சேர்த்து விடுகிறார்கள்.
இவ்வாறு அனுமதியின்றி சேர்க்கப்படும் செயல் பலருக்கு வெறுப்பூட்டுகிறது. நம்மில் பெரும்பாலானோர் தேவையற்ற குழுக்களின் ஓர் அங்கமாகவே இருக்கிறோம். குழுக்களில் இருப்பது வெறுப்பாக இருந்தாலும் குழுவிலிருந்து நாமாக வெளியேறுவது நாகரிமற்ற செயலாகக் கருதி குரூப்பிலிருந்து வெளியேறாமல் அப்படியே இருந்து விடுகிறோம்.
இருந்தாலும் எமக்கு நேரடி தொடர்பில்லாத எமக்குத் தெரியாத நபர்கள் எம்மைக் குழுக்களில் சேர்ப்பதைத் தடுக்கும் வசதியும் வாட்சப்பில் தரப்பட்டுள்ளது.
.அதிர்ஷ்டவசமாக, உங்கள் வாட்சப் கணக்கின் தனியுரிமை பிரிவில் நீங்கள் மாற்றக்கூடிய ஒரு அமைப்பு உள்ளது. இந்த வசதி உங்களுக்கு சம்பந்தமேயில்லாத நபர்கள் உங்களை குழுக்களில் சேர்க்கப்படுவதிலிருந்து தடுக்கும்.
உங்களை யார் குழுக்களில் சேர்க்கலாம் என்பதைத் தனிப்பயனாக்க-customize இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது.
மேலும் இயல்பு (default) நிலையில் ‘Everyone–அனைவரும்‘ என அமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்ட எவரும் உங்களை ஒரு குழுவில் சேர்க்கலாம். மேலும் நீங்கள் அமைப்புகளை மாற்றிய பின்னரும், குழு நிர்வாகிகள் உங்களுக்கு அழைப்பு இணைப்புகளை invite links அனுப்பலாம் மற்றும் குழுக்களில் சேர உங்களைத் தூண்டலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறியாத நபர்களின் குழுக்களில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
வாட்சப்பைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டி அமைப்புகள் (Settings) ஊடாக Account கணக்கை செல்லுங்கள்.
அங்கு தனியுரிமை-Privacy தெரிவு செய்து Groups என்பதைக் தட்டுங்கள். இயல்புநிலை அமைப்பானது ‘Everyone‘ என இருக்கும்.
நீங்கள் ‘Everyone-அனைவரும்’, ‘My Contacts-எனது தொடர்புகள்’ மற்றும் ‘My Contacts Except -எனது தொடர்புகள் தவிர’ மூன்று விருப்புக்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் –
‘Everyone‘ என்பது உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்ட எந்தவொரு பயனரையும் உங்கள் அனுமதியின்றி ஒரு குழுவில் சேர்க்க அனுமதிக்கிறது.
உங்கள் தொடர்பு பட்டியலில் –My Contacts நீங்கள் சேமித்த எண்களைக் கொண்ட பயனர்களை மட்டுமே உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்கிறது.
இறுதியிலுள்ள ‘My Contacts Except -எனது தொடர்புகள் தவிர’ எனும் தெரிவு உங்களை மேலும் வடிகட்டவும் ஒரு குழுவில் சேர்க்க விரும்பாத தொடர்புகளை நீக்கவும் அனுமதிப்பதன் மூலம் உங்களை யார் குழுக்களில் சேர்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.