Freesat Satellite Television Service Freesat எனும் பெயரில் இலவச செய்மதி தொலைக் காட்சி சேவையொன்று விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Freesat என்பது இலங்கை சேனல்களின் தொலைக்காட்சி வலையமைப்பு. இது DVB-S2X தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் வழியாக இலங்கை முழுவதும் டிஜிட்டல் தொலைகாட்சி (Digital TV) சேவையை வழங்கவிருக்கிறது. முக்கியமாக உள்ளூர் சேனல்கள்களுடன் கட்டணம் அறவிடாத பே- சேனல் Pay Channel அல்லாத பல வெளிநாட்டு சேனல்களும் ஃப்ரீசெட்டில் இருக்கும்.
இதற்கு முன்னர் இது போன்ற இலவச செய்மதி தொலைக்காட்சிச் சேவை இலங்கையில் இருக்கவில்லை. எனினும் பல நாடுகள் இவ்வாறான இலவச தொலைக்காட்சிச் சேவைகளை முன்னரே நடாத்துகின்றன. ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள Freesat, இந்தியாவின் Freedish போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இது முற்று முழுதான இலவச சேவை. மாதாந்த கட்டணம் அறவிடப்படமாட்டது. எனினும் பிற Digital TV சேவைகளைப் போலவே, இந்த சேவையை அணுக நீங்கள் ஒரு STB (Set Top Box) மற்றும் டிஷ் அண்டென்னா வைத்திருக்க வேண்டும். இதனை மிக விரைவில் இலங்கை முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் இதனை தாங்களாகவே பொருத்திக் கொள்ளவும் முடியும். அவ்வாறு முடியாதவர்கள் டிஸ் அண்டென்னா டெக்னீசியன் உதவியை நாடலாம்.
Freesat பார்வையாளர்களுக்கு இலவசமானாலும் Free-to-Air (FTA) சேவை அல்ல. இதனை Free-to-View என அழைக்கப்படுகிறது. அதாவது இங்கு சேவை encrypt செய்யப்படுகிறது. எனவே, இதற்கு ஒரு பிரத்யேக STB கொள்வனவு செய்வது அவசியம்.
நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் Free-to-Air STB ஐப் பயன் படுத்த முடியாது. இதற்கு முக்கிய காரணம், ஃப்ரீசேட் சேவையில் ஒளிபரப்பப்படும் பெரும்பாலான சேனல்களின் உள்ளடக்கங்கள். காப்புரிமை (copyrights) பெற்றவை. அவை இலங்கையின் எல்லைக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. செய்மதி சிக்னல்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமல்லாமல் அப்பகுதி முழுவதும் பரவுவதால், காப்புரிமை விதிகளின்படி சேவையை encrypt / Scramble என்கிரிப்ட் செய்ய வேணடிய தேவை ஏற்படுகிறது.
Digital தொழில்நுட்பத்திற்கான மாதாந்த கட்டணம் இல்லாமல் அனைத்து உள்ளூர் சேனல்களையும் ஃப்ரீசேட் இது வழங்குகிறது. வெளிநாட்டு சேனல்களையும் இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் Discovery, National Geographic போன்ற கட்டணம் அறவிடும் சேனல்களைப் பார்க்க விரும்பினால், அந்த சேவையை ஒரு சேவை வழங்குநரிடமிருந்து பெற வேண்டும்.
இலங்கை போன்ற நிலவுரு அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில் தரைவழி ஒளிபரப்பு Terrestrial Broadcasting என்பது மிகவும் கடினமான செயல்முறையாகும். இதன் கடினத்தன்மையை நாம் ஏற்கனவே அனுபவித்து வருகிறோம். இலங்கை நிலவுரு அமைப்பு காரணமாக பல இடங்களில் தரைவழி ஒளிபரப்பில் தெளிவான தொலைக் காட்சி சேவையை இதுவரை காலமும் மக்கள் பெற முடியவில்லை. இதனால்தான் சேட்டலைட் ஊடாக ஒளிபரப்பப்பு மிகவும் விரும்பத்தக்கதாக மாறியுள்ளது. ஃப்ரீசேட் இலங்கையில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் தொலைக் காட்சி சேவையை அனுபவத்தை வழங்கவுள்ளது.
Freesat Sri Lanka செய்மதி தொலைக் காட்சி சேவை ‘SES 12 – 95°E’ எனும் செய்மதியூடாக சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது.