Did Whatsapp change its Privacy Policy? பயனர் கொள்கை விடயத்தில் அடி பணிந்ததா வாட்சப்? கடந்த ஜனவரி 11 ம் திகதி வாட்சப் வெளியிட்ட புதிய அறிக்கை.
அண்மையில் வாட்சப்பில் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்ததன் இதன் காரணமாக வாட்சப் பற்றிய வதந்திகள் (வாட்சப்பில் வதந்திகள் பரவுவது வேறு கதை) உலகம் பூராவும் பரவ ஆரம்பித்துள்ளன. இது பற்றி பயனரிடமிருந்து ஏராளமான கேள்விகள் எங்களுக்குக் கிடைத்தன. சில சிந்திக்கத்தக்க கேள்விகளையும் பெற்றுள்ளோம். அவற்றுள் சில பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம். மக்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள உதவும் வகையில் வாட்சப்பை மாற்றியமைக்கவே நாங்கள் அதிக முயற்சி செய்கிறோம்.
தனியுரிமை கொள்கை புதுப்பிப்பினால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க விரும்புகிறோம். எனினும், இந்த புதுப்பிப்பில் வாட்சப்பில் ஒரு வணிகத்திற்கு செய்தி அனுப்புவது தொடர்பான மாற்றங்கள் உள்ளன. அதுவும் விருப்பத்திற்குரிய தெரிவுதான். மேலும் நாங்கள் தரவை எவ்வாறு சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் வெளிப்படைத்தன்மையை வாட்சப் வழங்குகிறது.
- உங்கள் தனிப்பட்ட செய்திகளை எங்களால் படிக்க முடியாது. உங்கள் அழைப்புகளையும் கேட்க முடியாது. அதேபோன்று பேஸ்புக்கினாலும் உங்கள் செய்திகளைப் படிக்கவோ அழைப்புகளைக் கேட்கவோ முடியாது.
நீங்கள் வாட்சப்பில் எதைப் பகிர்ந்தாலும் அது உங்களுக்கிடையில்தான் இருக்கும். ஏனெனில், உங்கள் தனிப்பட்ட செய்திகள் முனைக்கு முனை மறைகுறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பை நாங்கள் ஒருபோதும் பலவீனப்படுத்த மாட்டோம், - நீங்கள் யாருக்கு செய்தி அனுப்புகிறீர்கள் அல்லது அழைக்கிறீர்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்க மாட்டோம். இரண்டு பில்லியன் பயனர்களின் பதிவுகளை வைத்திருப்பது என்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விடயத்தில் ஆபத்தானது என்பதையும் நாங்கள் அறிவோம். அதனால் வாட்சப் அதனைச் செய்யாது.
- உங்களால் பகிரப்படும் இருப்பிடங்களையும் வாட்சப்பினால் பார்க்க முடியாது. பேஸ்புக்கிலும் இதே நிலைதான். உங்கள் இருப்பிடத்தை நீங்கள் பகிரும் நபர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது .
- உங்கள் தொடர்பு பட்டியலை (contact list) பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கும்போது, செய்தியை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் மாற்ற உங்கள் முகவரி புத்தகத்திலிருந்து தொலைபேசி எண்களை மட்டுமே அணுகுவோம். மேலும் பேஸ்புக் வழங்கும் பிற செயலிகளுடன் உங்கள் தொடர்பு பட்டியலை நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம்.
- வாட்சப் குழுக்களின் (Groups) தரவுகள் எப்போதும் தனிப்பட்டதாகவே இருக்கும். விளம்பர நோக்கங்களுக்காக நாங்கள் இந்த தரவை ஃபேஸ்புக்குடன் பகிர மாட்டோம்.
- நீங்கள் அனுப்பும் செய்திகளை ஏழு நாட்களில் சுயமாக மறைந்துவிடும் விதத்தில் புதிதாக ஒரு வசதியையும் வாட்சப்பில் (disappearing messages) இணைதுள்ளோம். நீங்கள் செட்டிங்ஸ் மூலம் இதனை மாற்றியமைக்கலாம்.
- உங்கள் கணக்கில் (account) எங்களிடம் உள்ள தகவல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Settings > Account > Request account info.
வாட்சப்பின் இந்த அறிக்கையைப் பார்க்கும் போது, வாட்சப்பின் தனியுரிமை கொள்கை விடயத்தில் பணிந்து விட்டதாகவே பலருக்குத் தோன்றும். ஆனால் அப்படி எந்த மாற்றமும் தனியுரிமைக் கொள்கையில் வாட்சப் செய்யவில்லை. ஆனால் முன்னர் சொன்ன விடயத்தை இன்னும் தெளிவாக மக்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லியிருக்கிறது என்பதே உண்மை.