Google to remove inactive accounts

Google to remove inactive accounts செயலற்ற கணக்குகளின் உள்ளடக்கத்தை நீக்கவுள்ளது கூகுல்

ஜிமெயில், கூகுல் டிரைவ் மற்றும் கூகுல் ஃபோட்டோஸ் பயன்பாடுகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாத பயனர்களின் உள்ளடக்கங்களை சேவையகத்திலிருந்து (servers) நீக்கி விடப் போவதாக கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும், கூகுல் வழங்கியிருக்கும் இலவச சேமிப்பிட பயன்பாட்டு வரம்பை தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக மீறினாலும் ஜிமெயில், டிரைவ் மற்றும் கூகுல்  புகைப்படங்களில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கவும் கூகுல்  தீர்மனித்துள்ளது. 

இந்தக் கொள்கை ஜூன் 1 2021 முதல் நடைமுறைக்கு வருவதோடு  ஜூன் 1 2023 அன்று செயல்படுத்தப்படும்.

இந்த அறிவிப்பின் படி, ஜிமெயில், கூகுல் ட்ரைவ் (கூகுல் டாக்ஸ், ஷீட்ஸ்-ஸ்லைட்ஸ், ட்ராயிங்ஸ், படிவங்கள் மற்றும் ஜேம்போர்டு கோப்புகள் உட்பட) மற்றும் கூகுல் ஃபோட்டோஸ் போன்ற கூகுல் பயன் பாடுகளில் ஒன்றைப் இரண்டு ஆண்டுகளுக்குள் பயனர்கள் பயன்படுத்தினால், அவர்கள் இந்தக் கொள்கையால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போதைய கூகுல் சேமிப்பிட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி ஒவ்வொரு கூகுல்  கணக்கும் 15 ஜிபி இலவச சேமிப்பு இடத்தை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமானால் பணம் செலுத்தி  கூகுல் வன் Google One சேவையைப் பெறலாம் .

எனவே உங்கள் Google கணக்கை செயலில் வைத்திருக்க எளிதான வழி ஜிமெயில் போன்ற சேவைகளை தவறாமல் அணுகுவதாகும். ஜூன் 1, 2021 க்குப் பிறகு, பயனர்கள் செயலற்ற அல்லது அதிக வரம்பை மீறிய சேவைகளைக் கொண்டிருந்தால், கூகுல்  மின்னஞ்சல் நினைவூட்டல்களையும் அறிவிப்புகளையும் முன்கூட்டியே அனுப்பும் எனவும் கூகுல் கூறுகிறது.

எனினும் கூகுல் பயன்பாடு செயலற்றதாக இருந்தாலும் அல்லது பயன்பாடு சேமிப்பிட இடத்தின் வரம்பை மீறி உள்ளடக்கம் நீக்கப்பட்டிருந்தாலும், பயனர்கள் இந்த சேவைகளில் உள்நுழைய முடியும்.

கூகுலின் இந்த அறிவிப்பை நாம் கவனத்தில் கொண்டு  நீங்கள் இழக்க விரும்பாத ஜிமெயில்உள்ளடக்கங்கள்  இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அதனை அணுகுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும்  சேமிப்பிட வரம்பை (15 ஜிபி) மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *