Mobile Number Portability வசதி இலங்கையிலும் அறிமுகமாகிறது

எந்தவொரு சேவை வழங்குநரிடமும் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கும் எண் பெயர்வுத்திறன் / இணக்கப்பாடு) / (Mobile Number Portability) எனும் வசதியை இலங்கையிலும்  அறிமுகப்படுத்த TRCSL தயாராகி வருகிறது

உங்களிடம் தற்போதுள்ள மொபைல் போன் எண்ணை (டயலொக், மொபிடெல், ஹட்ச் `எதுவாகவும் இருக்கலாம்) மாற்றாமல் சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில்  அறிவித்துள்ளது,

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL),உலக வங்கியின் கீழ் உள்ள நிறுவன அபிவிருத்தி நிதியத்தின் (Institutional Development Fund) ஒப்புதலுடன், இலங்கையில் மொபைல் எண் பெயர்வுத்திறன் அல்லது (Mobile Number Portability – MNP)  எம்.என்.பி எனும் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

எம்.என்.பி வசதியை அறிமுகம் செய்வதனால் வாடிக்கையாளர்கள் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை மாற்றாமல் மற்றொரு சேவை வழங்குநருக்கு மாற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நீங்கள் டயலொக் சிம் பயன்படுத்தினால் எண்ணை மாற்றாமல் மொபிடெல் அல்லது ஹட்ச் போன்ற மற்றொரு சேவை வழங்குநருக்கு மாறிக் கொள்ளலாம்

number portability

இந்த வசதி தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனருக்கு அவர்கள் விரும்பும் பொதியைப் பயன்படுத்த முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது, மேலும் இது சேவை வழங்குனர்களுக்கிடையில் வியாபாரப் போட்டியையும் உருவாக்குகிறது.

இந்த நடவடிக்கைக்கு சேவை வழங்குநர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக டி.ஆர்.சி.எஸ்.எல் மேலும் அறிவித்துள்ளதுடன் இப் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப விடயங்களில் டி.ஆர்.சி.எஸ்.எல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த வசதி நுகர்வோருக்கு கிடைக்க இன்னும் ஒரு வருட காலம் செல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது. (2020 August 26)

Update : இந்த மாத இறுதியில் இலங்கையில் பயன்பாட்டிற்கு வருகிறது (2021 October 14)

About admin

Check Also

Google ends Bard waitlist, chatbot now widely available

காத்திருப்புப் பட்டியலை நீக்கியது Google Bard Chat GPT ற்குப் போட்டியாக கடந்த மார்ச் மாதம் அறிமுகமான கூகுல் நிறுவனத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *