பிடிக்காத ஃபேஸ்புக் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் பண்ணத்தான் வேண்டுமா? Do you really need to unfriend someone from your friend list?
நண்பர்களோடு மனஸ்தாபங்கள் வரும் போது இப்போதெல்லாம் நாம் செய்யும் முதலாவது காரியம் அந்த நண்பரை முக நூல் நட்புப் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதுதான். அதேபோன்று சில முக நூல் நண்பர்களின் எரிச்சலூட்டும் பதிவுகளையும் சங்கடப்படுத்தும் பதிவுகளையும் அடிக்கடி காணும் போது நாம் செய்வதும் அதே அன்ஃப்ரெண்டிங்தான்.
Do you really need to unfriend someone from your friend list on Facebook? இப்படி நீங்கள் நண்பர்களின் பிடிக்காத செயற்பாடுகளைக் காணும் போது எடுத்த எடுப்பிலேயே அவர்களை அன்ஃப்ரெண்ட் செய்து விட வேண்டியதில்லை. ஃபேஸ்புக் ஆரம்ப காலத்தில் அன்ஃப்ரெண்ட் செய்வதுதான் ஒரே தெரிவாக இருந்து. ஆனால் இப்போது அன்ப்ஃரெண்ட் செய்யாமலேயே நண்பர்களை விலக்கி வைக்க, ஒதுங்கியிருக்க அன்ஃப்லோ –unfollow, டேக் அ ப்ரேக்–take a break என மேலும் இரண்டு வழிகள் முக நூலில் கிடைக்கின்றன.
இப்போது unfollow, unfriend, மற்றும் take a break இவை மூன்றிற்கும் இடையில் என்ன வேறு பாடுகள் உள்ளன எனப் பார்ப்போம்.
அன்ஃப்ரெண்ட் Unfriend என்பது நட்பு நீக்கம் செய்வதற்கான பேஸ்புக்கில் கிடைக்கும் ஒரு பழமையான தெரிவு. ஒருவரை அன்ஃப்ரெண்ட் செய்யும்போது ஒருவருக்கொருவர் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள். நண்பர்கள் இருவரில் யரோ ஒருவர் நட்பு நீக்கம் செய்தாலும் அதன் விளைவு இருவருக்கும் ஒரே மாதிரி அமையும். அதாவது, இருவருக்கும் மற்றவரின் தனிப்பட்ட இடுகைகளை காண முடியாது. கடந்த கால, எதிர்கால பதிவுகளை யும் காண முடியாது. மேலும் நீங்கள் நண்பரை நட்பு நீக்கம் சேய்யும் போது அவருக்கு அது பற்றி அறிவிக்கப்படா விட்டாலும் (notifications) பின்னர் அதனை அவரால் உணர்ந்து கொள்ள முடியும்.
அன்ஃபலோ – Unfollow என்பது ஒருவரை நட்பு நீக்கம் செய்யாமல் அவரைப் பின் தொடர்வது நிறுத்துதப்படுகிறது. இன்னொரு வகையில் குறிப்பிட்டால் நண்பர் அறியாமலேயே அவரை நட்பு நீக்கம் செய்யப்பட்டுகிறது. மேலும் ஒருவரை அன்ஃபலோ செய்து விட்டால் அவர்களின் இடுகைகளை உங்கள் கால வரிசையில் (timeline) காண்பிக்காது. இருப்பினும், அவர்கள் உங்கள் இடுகைகளைக் காண முடியும். உங்கள் டைம் லைனில் நணபரின் இடுகை தோன்றுவதை மறைக்கும் வழியாகவும் இதனை எடுத்துக் கொள்லலாம்.
பேஸ்புக் நட்புப் பட்டியலிலிருந்து நண்பர்களை ஒதுக்கி வைக்கும் மற்றுமொரு வழி Take a break டேக்-அ-ப்ரேக் எனும் தெரிவாகும். இது ஒருவரைப் பின்தொடர்வதை நிறுத்துவது மற்றும் அவர்களை தடைப் பட்டியலில் (restricted list) சேர்ப்பது ஆகிய இரண்டு தெரிவுகளின் கலவை எனலாம்.
Take a break எனும் நண்பர் தொல்லையிலிருந்து ஓய்வு எடுப்பதன் மூலம், மூன்று விடயங்கள் நடை பெறும். முதலில், உங்கள் டைம் லைனில் நண்பரின் இடுகையைப் பார்க்க முடியாது (இது பின்தொடர்வதை நிறுத்துவதற்கு சமம்) இரண்டாவது, உங்கள் தனிப்பட்ட இடுகைகளையும் (private posts-not public) அவர்களால் பார்க்க முடியாது (இது அவர்களை தடை பட்டியலில் – restricted list சேர்ப்பது போன்றது) மூன்றாவது, உங்களுக்கிடையில் நடந்த கடந்த கால பதிவுகளை நீங்களாகவே நீக்கவோ அல்லது அவற்றை அப்படியே வைத்திருக்கவோ உங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. எனினும் அன்ஃப்ரெண்டில் இந்த வசதி கிடைக்காது. (Restricted list என்பது உங்கள் பதிவுகளை நட்புப் பட்டியலில் யாரல்லாம் பார்க்கக் கூடாது எனும் தடைப் பட்டியலாகும்)
இப்போது உங்களுக்கு எது வசதி என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
Featured Image by Gerd Altmann from Pixabay