இலங்கையிலும் அறிமுகமானது – Google Transit

பேரூந்து மற்றும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர்க்கான கூகுல் மேப்ஸின் கண்காணிப்பு அம்சமான கூகிள் டிரான்சிட் வசதியை இலங்கையிலும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுல். இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சேவை இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

கூகுல் ட்ராண்ஸிட் சேவையின் சிறப்பு என்னவென்றால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி ஓர்  இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தக்கூடிய பேருந்துகள், ரயில்கள் மற்றும் அவற்றின் புறப்படும் நேரம், இலக்குக்குச் செல்வதற்கான மாற்று வழிகள் மற்றும் அங்கு செல்வதற்கான மிகச் சிறந்த வழி போன்ற பல பொதுப்போக்குவரத்து தொடர்பான விவரங்களை வழங்குகிறது.

உதாரணமாக, ஓர் இடத்திலிருந்து மற்றுமோர் இடத்திற்கு நேரடியாக பேருந்தில் செல்ல ஒரு மணித்தியாலம் எடுக்கும் எனில் அதே இடத்திற்கு மாற்று வழியில் பாதிதூரம் ரயிலில் பயணித்து அங்கிருந்து மறுபடி பேருந்தில்  இலக்கு நோக்கிச் செல்வதன் மூலம் 45 நிமிடங்களில் செல்லலாம் என வழிகாட்டுகிறது கூகுல் ட்ராண்ஸிட்.

கூகுள் மேப்ஸ் சேவை இலங்கையின் மேல் மாகாணத்தில் இயங்கும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பற்றிய தகவல்களை மட்டுமே தற்போது வழங்குகிறது. ஏனைய மாகாணங்களிற்கும் படிப்படியாக இது விஸ்தரிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

கூகுள் ட்ராண்சிட் சேவைக்குத் தேவையான தரவுகளை வழங்க தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

கூகுல் ட்ராண்ஸிட்டில் தகவல்களின் துல்லியத் தன்மைக்கு, மேல் மாகாண போக்குவரத்து ஆணையமே பொறுப்பாகும்.  மேலும் பேரூந்து மற்றும் ரயில் சேவைகள் குறித்த கூடுதல் தகவல்களை அறிய தொடர்புடைய இணையதளமுகவரி மற்றும் தொலைபேசி எண்களும் வழங்கப்படுள்ளன.

ரயில் சேவை விவரங்கள் சிவப்பு நிறத்திலும் பேருந்து சேவைகள் பச்சை நிறத்திலும்  வரைபடத்தில் காண்பிக்கப்படுகிறது.

Google மேப்ஸ் செயலியின் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்து அல்லது  Google Maps Go செயலியை நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த கூகுல் ட்ரான்ஸிட் வசதியைப் பயன்படுத்தலாம்.

Google மேப்ஸ்ஸில் transit வசதியைப் பயன்படுத்துவது எப்படி

  • நீங்கள்செல்ல விரும்பும் இருப்பிடத்தை Find a place   எனுமிடத்தில். டைப் செய்யுங்கள்.
  • உங்கள்தற்போதைய இருப்பிடத்தையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்துவலது கீழ் மூலையில் உள்ள நீல Directions / Navigate பட்டனில் தட்டுங்கள்.
  • பொதுபோக்குவரத்து விருப்பங்களைக் காண ரயில் ஐகானைத் தட்டுங்கள்.
  • Leave Now  என்பதில் தற்போது  புறப்படத்  தயாராயுள்ள  பேரூந்துகளையும்  ரயில்களையும் காணலாம்.
  • ஒருகுறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் அல்லது பேருந்துகள் கிடைக்குமா என்பதைப் பார்க்க, Depart at என்பதை  தெரிவு  செய்து  நீங்கள்  விரும்பிய  நேரத்தை  உள்ளிட்டு  காணலாம்.
  • உங்கள்பயணதிற்கான சிறந்த வழி எது என்பதை Best route தெரிவு செய்து காணலாம்.

இது போன்ற மேலும் பல வசதிகளைக் கொண்டுள்ளது கூகுல் ட்ரான்சிட்.

About admin

Check Also

WhatsApp rolls out Message Yourself feature

நீங்களே உங்களுக்கு செய்திகளை அனுப்பக் கூடிய வசதியை வாட்சப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. Message Yourself  எனும்  இந்த அம்சம் மூலம்  பயனர்கள் வாட்சப்பில் குறிப்புகள்-notes, படங்கள்-images நினைவூட்டல்கள்-reminders மற்றும் இணைப்புகள்-links  போன்றவற்றை  தங்களுக்கே அனுப்பி அவற்றை சேமித்து தேவையான போது பயன் படுத்திக்  கொள்ள முடியும் இந்த அம்சத்தைப் பெற வாட்சப்பின் புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.  வாட்சப் வெப் -இல் தற்போது இதனைப் பயன் படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *