கணினியில் இயக்கத்தில் ஏதும் சிக்கலேற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிக்கலைத் தீர்ப்பதை கணினிப் பயனர்கள் அனைவரும் ஒரு சலிப்பூட்டும் அனுபவமாகவே கருதுகின்றனர்.
இனிமேல் அவ்வாறான சந்தர்ப்பங்களில்நீங்கள் சலிப்ப்டைய வேண்டாம். உங்களுக்கென பைக்ரோஸொப்ட் நிறுவன்ம் ஒரு இலவச கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கணினியில் ஏற்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த பல்வேறு வகையான சிக்கல்களைக்கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்கிறது Microsoft Fix It எனும்மென்பொருள்கருவி. .
இந்தக் கருவி உங்கள் கணினியை முழுமையாக ஸ்கேன் செய்து உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள்களைப் பரீட்சித்து உங்களை சிக்கல்களைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய அதேவேளை கணினியில் மேலுமுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை உங்கள் முன்னே பட்டியலிடுகிறது,.
அதேபோல் மேலும் புதிதாக கணினி சிக்கல்களைக் கண்டறியக் கூடிய கருவிகளை மைக்ரோஸொப்ட் வெளியிடும் போது அவற்றை டவுன்லோட் செய்து இந்த Fix It Center -இல் சேமித்து விடுகிறது.
இது விண்டொஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு இலவச யூட்டிலிட்டியாகும். இதனை மைக்ரோஸொப்ட் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். –அனூப்-