மாதிரி வினா: விற்பனைப் பகுப்பாய்வு (Sales Analysis)
ஒரு புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளர், கடந்த ஒரு வாரத்தில் விற்கப்பட்ட புத்தகங்களின் தரவுகளைக் கொண்டு ஒரு விரிதாளை (Spreadsheet) உருவாக்குமாறு உங்களிடம் கேட்டுள்ளார். அதன் விபரங்கள் பின்வருமாறு:
விற்பனை நிலையத்தில் 5 வகையான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. அவை: சிறுவர் கதைகள் (Children), நாவல்கள் (Novels), கவிதைகள் (Poetry), வரலாறு (History) மற்றும் அறிவியல் (Science).
(a) இந்த விரிதாள் புத்தகத்தின் பெயர், ஒரு புத்தகத்தின் விலை (Unit Price), மற்றும் விற்கப்பட்ட எண்ணிக்கையினை (Quantity Sold) ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியாகக் கொண்டிருக்க வேண்டும்.
(b) ஒவ்வொரு வகைப் புத்தகத்தின் மூலமும் கிடைத்த மொத்த வருமானம் (Total Revenue = Unit Price × Quantity Sold) மற்றும் அதற்கு வழங்கப்பட வேண்டிய 10% கழிவுத் தொகை (Discount) என்பவற்றை அடுத்தடுத்த நிரல்களில் (Columns) கணக்கிட வேண்டும்.
(c) புத்தகங்களின் தரவுகள், விற்கப்பட்ட எண்ணிக்கையின் (Quantity Sold) அடிப்படையில் ஏறுவரிசையில் (Ascending Order) வரிசைப்படுத்தப்பட வேண்டும்.
(d) விற்கப்பட்ட எண்ணிக்கையின் அதிகூடிய (Maximum) மற்றும் மிகக்குறைந்த (Minimum) பெறுமானங்களை அட்டவணையின் இறுதியில் காட்ட வேண்டும்.
(e) புத்தகங்களின் பெயர்களையும் அவற்றின் மொத்த வருமானத்தையும் (Total Revenue) ஒப்பிடும் ஒரு தூண் வரைபடம் (Column Chart) இணைக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய தேவைகளின் அடிப்படையில் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக:
(i) விரிதாளின் மாதிரி அமைப்பை (Layout) நிரல் பெயர்களுடன் வரைக.

(ii) பகுதி (b) மற்றும் (d) ஆகியவற்றை கணக்கிடுவதற்கான சூத்திரங்களை (Formulas) எழுதுக. (குறிப்பு: சிறுவர் கதைகள் வரிசை 2 இல் உள்ளதாகக் கருதுக)
மொத்த வருமானம்: =B2*C2
10% கழிவு: =D2*10% அல்லது =D2*0.1
அதிகூடிய எண்ணிக்கை: =MAX(C2:C6)
குறைந்த எண்ணிக்கை: =MIN(C2:C6)
(iii) பகுதி (c) மற்றும் (e) இற்கான படிமுறைகளை விளக்குக.
- வரிசைப்படுத்தல் (Sorting): தரவுகளைத் தெரிவு செய்து, Data மெனுவில் Sort என்பதை அழுத்தி, ‘Quantity Sold’ என்பதை ‘Smallest to Largest’ எனத் தெரிவு செய்யவும்
- வரைபடம் (Chart): புத்தகத்தின் பெயர் மற்றும் மொத்த வருமானம் ஆகிய நிரல்களைத் தெரிவு செய்து, Insert மெனுவில் Column Chart என்பதைத் தெரிவு செய்யவும்.

InfotechTamil A Blog for IT Related Articles in Tamil