IT Job Titles

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள சில பதவிகள்

1. சிஸ்டம் எனலிஸ்ட் (System Analyst)

ஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதைப் பல் வேறுபட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீர்மானத்திற்கு வருவார்.

  • கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும் , அந்த டேட்டாவை எவ்வாறான செயற்பாடுகளுக்கு உட்படுத்த வேண்டும் , தகவல் எவ்வாறு நிறுவன வாடிக்கையாளர்களையோ அல்லது நிறுவன ஊழியர்களையோ சென்றடையும் போன்ற பல விடயங்களைத் திட்டமிடுவார்.
  • இறுதித் தீர்மானத்திற்கு வந்த பின்னர் அதற்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை உருவாக்கும் பொறுப்பைக் கணினி ப்ரோக்ராமர்களிடம் கையளிப்பார்.
  • கணினித் துறையில் உச்ச நிலையில் இருப்பர்வர்கள் இந்த சிஸ்டம் எனலிஸ்ட் என் கருதப்படுகிறது

மேலதிக தகவல்:

  • பங்குதாரர் மேலாண்மை (Stakeholder Management): இவர் நிறுவன வாடிக்கையாளர்கள், நிர்வாகம், மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஆகியோருக்கு இடையில் ஒரு பாலமாகச் செயல்பட்டு, அனைவரின் தேவைகளையும் சமநிலைப்படுத்துவார்.
  • மாற்ற மேலாண்மை (Change Management): புதிய முறைமை நிறுவப்படும்போது, ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்ய உதவுவார்.
  • செலவு-பயன் பகுப்பாய்வு (Cost-Benefit Analysis): புதிய முறைமைக்கான செலவும், அதனால் ஏற்படும் நன்மையும் குறித்த விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொள்வார்.

2. ப்ரோக்ரமர் (Programmer)

கணினி நிரல்களை (Programs) உருவாக்குபவரே ப்ரோக்ரமர் எனப்படுகிறார்.

  • கணினி நிரல்களை உருவாக்குவதோடு அவற்றைப் பரீட்சித்தல், பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களைக் கொண்டிருப்பர்.
  • ஒரு ப்ரோக்ரமர் ஜாவா, விஷுவல் பேசிக், சீ போன்ற கணினி மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பர்.
  • ஒரு ப்ரோக்ரமர் என்பவர் ஒரு பாரிய பிரச்சினையின் ஒரு பகுதிக்குரிய ப்ரோக்ரமை உருவாக்குவார்.
  • குறியீட்டுச் சீராய்வு (Code Review): குறியீட்டின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த, சக ப்ரோக்ராமர்கள் எழுதிய குறியீட்டைச் சரிபார்க்கும் பொறுப்பை கொண்டிருப்பார்.
  • தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு (CI/CD): தானியங்கிச் சோதனை (Automated Testing) மற்றும் குறியீட்டை விரைவாகப் பயன்பாட்டுச் சூழலுக்குக் கொண்டு செல்லும் முறைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்.

3. ஸொப்ட்வெயர் டெவலப்பர் (Software Developer)

ஸொப்ட்வெயர் டெவலப்பரும் கணினி நிரல்களை உருவாக்கும் ப்ரோக்ரமர் போன்றவரே. எனினும் டெவலப்பரின் பணி இன்னும் அதிகமாகும்.

  • டெவலப்பர் என்பவர் அந்தப் பாரிய பிரச்சினையின் ஒவ்வொரு பகுதிக்கும் என உருவாக்கப்பட ப்ரோக்ராம்களை ஒன்று சேர்த்து ஒரு முழுமையான மென்பொருளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்.
  • அத்தோடு அந்த மென்பொருளைப் பரீட்சித்தல், பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களையும் கொண்டிருப்பர்.
  • டெவ்ஆப்ஸ் (DevOps) ஒருங்கிணைப்பு: இவர் மென்பொருளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதனை நிறுவுதல் (Deployment) மற்றும் கண்காணித்தல் (Monitoring) செயல்முறைகளிலும் தீவிரமாகப் பங்கேற்பார்.
  • தீர்வு-மைய அணுகுமுறை (Solution-Oriented Approach): ஒரு பெரிய சிக்கலின் ஒட்டுமொத்தத் தீர்வு (End-to-End Solution) மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருளை மேம்படுத்தும் வழிமுறைகளையும் வடிவமைப்பார்.

4. தரவுத் தள நிர்வாகிகள் (Database Administrators – DBAs)

ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான தகவல்களை நிர்வகிப்பது இவரின் கடமையாகும்.

  • தரவுத் தள நிர்வாகிகள் தரவுத்தள நிர்வாக மென்பொருளொன்றுடன் பணியாற்றுவர்.
  • தரவுத் தளமொன்றை உருவாக்குதல், தரவுகளைச் சேமித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தரவுகளை முன் வைத்தல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்பர்.
  • மீட்புத் திட்டமிடல் (Disaster Recovery Planning): தரவு இழப்பைக் குறைக்கவும், தரவுத் தளத்தை விரைவாக மீட்டெடுக்கவும் காப்புப்பிரதி (Backup) மற்றும் மீட்பு நடைமுறைகளை உருவாக்குதல் மற்றும் சோதித்தல்.
  • செயல்திறன் சரிசெய்தல் (Performance Tuning): வினவல் நேரத்தைக் குறைப்பதன் மூலம், தரவுத்தளம் பெரிய அளவிலான தரவுகளிலும் விரைவாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவார்.

5. சிஸ்டம்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் (Systems Administrators)

ஒரு நிறுவனத்தின் கணினி முறைமை திறம்படச் செயலாற்றுவதைக் கண்காணிப்பது இவர்களின் பணியாகும்.

  • கணினி மற்றும் கணினியோடு இணைந்த துணைச் சாதனங்கள், கணினி வலையமைப்பு, மென்பொருள் போன்றன முறையாக இயங்குவதை உறுதி செய்வது போன்ற கடமைகள் இவருக்குரியது.
  • கணினி முறைமையில் சிக்கல் தோன்றும்போது அவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் , சில வேளைகளில் வலையமைப்புக்களைக் கண்காணிப்பதோடு அவற்றின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருப்பார்.
  • பேட்ச் மேலாண்மை (Patch Management): கணினி முறைமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்புத் திருத்தங்களை முறையாகப் பயன்படுத்துவார்.
  • வள ஒதுக்கீடு (Resource Allocation): சேவையகங்கள் (Servers) போன்ற வளங்கள் திறம்படப் பகிரப்படுவதை உறுதிசெய்து, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பார்.

6. வலையமைப்பு நிர்வாகி (Network Administrator)

ஒரு நிறுவனத்தின் கணினி வலையமைப்பை நிர்வகிப்பது இவரின் பணியாகும்.

  • கணினி வலையமைப்பு முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதோடு , வலையமைப்பில் பயன்படுத்தப்படும் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களைக் கண்காணிப்பார்.
  • அதிகாரமற்ற எவரும் தமது கனினி வலையமைப்பினுள் உட்புகா வண்ணம் பாதுகாப்பதும் இவரின் கடமையாகும்.
  • வலையமைப்பு நிர்வாகிகளுக்கு வலையமைப்புச் சாதனங்கள், வலையமைப்பு மென்பொருள், மற்றும் வலையமைப்பு நியதிகள் (புரட்டகோல்) போன்ற வற்றில் போதிய தேர்ச்சியிருத்தல் வேண்டும்.

7. வலையமைப்புப் பொறியியலாளர் (Network Engineer)

ஒரு நிறுவனத்திற்குரிய உள்ளக வலையமைப்பு (LAN), பரந்த வலையமைப்பு (WAN), இணையம், அக இணையம் (Intranets) போன்ற கணினி வலையமைப்புக்களையும் மற்றும் தொடர்பாடல் முறைகளையும் உருவாக்குபவரே.

  • நிறுவனத்தின் தேவைக்கேற்றவாறு வலையமைப்பை உருவாக்கத் தேவையான சாதனங்களையும் மென்பொருள்களையும் தெரிவு செய்வதோடு அவற்றை நிறுவுதலை மேற்பார்வை செய்வார்.
  • அந்த வலையமைப்பை முறையாக இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் இவரின் பணியாகும்.

8. கணினி வன்பொருள் பொறியியலாளர் (Computer Hardware Engineers)

கணினி வன்பொருள் பொறியியலாளர் எனப்படுபவர் கணினி உதிரிப்பாகங்களை ஆராய்ந்து வடிவமைத்தல், பரீட்சித்தல், அவற்றை தயாரித்தல், நிறுவுதல் போன்ற பல பொறுப்புக்களை ஏற்பார்.

  • கணினித் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சிக்கு இந்த கணினி வன்பொருள் பொறியியலாளர்களின் பங்கு அளப்பரியது எனலாம்.

9. வெப்மாஸ்டர் (Webmasters)

இணைய தளங்களைப் நிர்வகிக்கும் பொறுப்பு வெப் மாஸ்டர்களைச் சாரும்.

  • இணைய தளங்கள் பயனர்களின் பார்வைக்கு உட்படுகிறதா , இணைய தளங்கள் வேகமாக பயனர் கணினிகளை அடைகிறதா போன்ற விடயங்களைக் கண்காணிப்பார்.
  • இணைய தளங்களில் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதும் இவர் கடமைகளாகும்.
  • மேலும் இணைய தள பயன்பாடு பற்றிய தரவுகளைச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதோடு பயன்ர்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதும் இவர் கடமைகளில் அடங்கும்.

10. வெப் டெவலப்பர் (Web developers)

இணையதள உருவாக்கத்தில் உள்ள பல் வேறுபட்ட தொழில் நுட்பத் திறன்களை இவர் கொண்டிருப்பார்.

  • இணைய தளங்களில் பயன்படுத்தத்தக்க எப்லிகேசன்களை உருவாக்குதல் , இணைய தளங்களின் பயனர்களை இனங்காணல் , இணைய தளங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதையும் தீர்மாணித்தல்.
  • இணைய தளங்களைத் தரவுத் தளங்களோடு ஒன்றிணைத்தல் , நிறுவனத்தின் தேவைக்கேற்றவாறு இணைய தளங்கள் செயற்படுவதை உறுதி செய்தல் போன்றன இவர் பணிகளாகும்.
  • வெப் டெவலப்பர் என்பவர் அதிகமாக சேர்வர் கணினி சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவார்.

11. வெப் டிசைனர் (Web Designer)

இணைய தளங்களை வடிவமைப்பவர்களே வெப் டிசைனர் எனப்படுகிறார்.

  • வெப் மாஸ்டரின் அறிவுரைக்கேற்ப இணைய தளங்களைக் கவர்ச்சியாகவும் இலகுவாக அணுகக் கூடியதாகவும் வடிவமைத்தல் இவர் பணியாகும்.

12. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)

ஒரு நிறுவனத்தில் தகவல்களைத் திறன்படக் கையாள்வதில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பங்காற்றுகின்றனர்.

  • தரவுகளைக் கணினிக்கு உள்ளீடு செய்வதோடு காரியாலய உபகரணங்களைக் கையாள்வதும் இவரது பணிகளாகும்.

13. கணினி இயக்குனர்கள் (Computer Operator)

கணினி இயக்குனர்கள் என்போர், தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்கேற்ப கணினி சார்ந்த பல் வேறு பணிகளைக் கொண்டிருப்பர்.

  • வழமையான கணினிசார் செயற்பாடுகளை மேற்கொள்வார்.
  • அனேகமாக எம்.எஸ்.ஒபிஸ் போன்ற எப்லிகேசன் மென்பொருளைப் பயன்படுத்துவார்.
  • அத்தோடு கணினியில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல் கணினி இயக்குனர்களின் பணிகளாகும்.

14. கணினிப் பாதுகாப்பு நிபுணர்கள் (Computer security specialists)

ஒரு நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பைத் திட்டமிடுவதிலும் உறுதி செய்வதிலும் Computer security specialists பங்காற்றுகின்றனர்.

  • நிறுவனத்திலுள்ள கணினி பயன்ர்களைக் கணினி பாதுகாப்பு பற்றி அறிவூட்டுதல் , பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவுதல்.
  • வலையமைப்புக்களில் ஏற்படக்கூடிய வழுக்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல்.
  • அனுமதியின்றி எவரேனும் வலையமைப்பினுள் பிரவேசிக்கும்போது உரிய பதில் நடவடிக்கை எடுத்தல்.
  • கணினி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சாட்சியங்களைத் திரட்டல் போன்றன இவர்களின் பணிகளாகும்.

15. கிரபிக் டிசைனர் / டெஸ்க்டொப் பப்லிஷர் (Graphic Designer / Desktop Publisher)

விளம்பரத்துறை, பதிப்புத் துறை மற்றும் இணைய தளங்களில் பயன்படுத்தக் கூடியவாறான எழுத்துக்கள், உருவங்கள், படங்களைக் கொண்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது கிரபிக் டிசைனரின் பணியாகும்.

  • போட்டோ ஷொப், இலஸ்ட்ரேட்டர், கோரல் ட்ரோ போன்ற கிரபிக் டிசைனிங் மென்பொருள்களில் தேர்ச்சியும் அதிக கற்பனைத் திறனும் இவரிடம் எதிர்பார்க்கப்படும்.
  • இவரை ஒரு கணினி ஓவியர் என்றும் சொல்லலாம்.
  • டெஸ்க்டொப் பப்ளிஷரும் கிரபிக் டிசைனரின் பணிகளையே மேற்கொள்வார். எனினும் இவருடைய பணி புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற பதிப்புத் துறை சார்ந்தாயிருக்கும்.

16. திட்ட மேலாளர் (Project Manager)

  • பொறுப்புகள்: தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை ஆரம்பம் முதல் நிறைவு வரை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டவர்.
  • பணிகள்: திட்டத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல், மற்றும் முடித்தல் ஆகியவற்றைச் செய்து, திட்டம் சரியான நேரத்தில், ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்குள் நிறைவடைவதை உறுதி செய்கிறார்.

17. தர உறுதிப்பாட்டுச் சோதனையாளர் (Quality Assurance (QA) Tester)

  • பொறுப்புகள்: மென்பொருளின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பைக் கொண்டவர்.
  • பணிகள்: மென்பொருள் வெளியீட்டுக்கு முன், அனைத்து தேவைகளையும் தரங்களையும் பூர்த்தி செய்கிறதா என்பதைச் சோதிப்பார். மென்பொருளில் உள்ள பிழைகளைக் (Bugs) கண்டறிய சோதனைத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவார்.

18. கிளவுட் ஆர்கிடெக்ட் (Cloud Architect – மேகக் கட்டமைப்புப் பொறியியலாளர்)

  • பொறுப்புகள்: நிறுவனத்தின் மேகக் கணினி உத்தியை (Cloud Computing Strategy) வடிவமைத்து நிர்வகிப்பவர்.
  • பணிகள்: கிளவுட் தளங்களில் (AWS, Azure, Google Cloud) பயன்பாடுகளை வடிவமைத்தல், மேலாண்மை செய்தல், மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குதல். ஒரு அளவிடக்கூடிய மற்றும் பாதுகாப்பான கிளவுட் சூழலை உருவாக்குவதை உறுதி செய்தல்.

19. தகவல் பாதுகாப்பைப் பகுப்பாய்வாளர் (Information Security Analyst)

  • பணி: நிறுவனத்தின் தகவல் அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களைக் (Threats) கண்டறிதல் மற்றும் தடுப்பது.
  • பொறுப்புகள்: பாதுகாப்பு மீறல்களைத் (Security Breaches) தடுக்கவும், தரவு இழப்பைக் குறைக்கவும் பாதுகாப்புக் கொள்கைகளை (Security Policies) உருவாக்குவது. நிறுவனத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் (Controls) போதுமானதாக இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பது.

20. ஊடுருவல் சோதனையாளர் (Penetration Tester / Ethical Hacker)

  • பணி: நிறுவனத்தின் அமைப்புகளை ஊடுருவி, சட்டப்பூர்வமான முறையில் ஹேக் செய்து அதன் பலவீனங்களைக் (Vulnerabilities) கண்டறிவது.
  • பொறுப்புகள்: உண்மையான சைபர் தாக்குதல் நடந்தால் என்னென்ன பலவீனங்கள் வெளிப்படும் என்று ஆய்வு செய்து, அவற்றைக் சரி செய்ய அறிக்கைகள் மற்றும் தீர்வுகளை வழங்குவது.

21. பாதுகாப்பு கட்டமைப்பு பொறியியலாளர் (Security Architect)

  • பணி: நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கான (IT Infrastructure) முழுமையான பாதுகாப்பு வடிவமைப்பை உருவாக்குவது.
  • பொறுப்புகள்: புதிய வலையமைப்புகள், கிளவுட் அமைப்புகள் அல்லது பயன்பாடுகள் (Applications) உருவாக்கப்படும்போது, அவை ஆரம்பத்திலிருந்தே வலுவான பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்வது.

22. பாதுகாப்பு செயல்பாட்டு மையப் பகுப்பாய்வாளர் (SOC Analyst – Security Operations Center)

  • பணி: நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை (SOC) 24/7 கண்காணிப்பது.
  • பொறுப்புகள்: நிகழ்நேரத்தில் (Real-time) வரும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை (Alerts) பகுப்பாய்வு செய்து, அவற்றைச் சரியான பாதுகாப்புச் சம்பவங்களாக (Security Incidents) இனங்கண்டு, உடனடியாகப் பதில் நடவடிக்கைகளை எடுப்பது.

23. தடயவியல் நிபுணர் (Forensic Analyst / Incident Responder)

  • பணி: ஒரு பாதுகாப்புச் சம்பவம் (Incident) நடந்தபின், அதன் மூல காரணத்தைக் கண்டறிவது.
  • பொறுப்புகள்: பாதிக்கப்பட்ட கணினிகள் அல்லது வலையமைப்புகளில் இருந்து டிஜிட்டல் சாட்சியங்களை (Digital Evidence) சேகரிப்பது, தாக்குதலின் பாதையை (Attack Vector) ஆய்வு செய்வது, எதிர்காலத்தில் இதேபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க உதவிகளை வழங்குவது.

About Anoof Sir

Check Also

GIT Diagnostic Test MCQ 2022 Wayamba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *