2009 Question No. 06
(i) ஒருவர் வழமையாக நீண்ட நேரம் கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படத்தக்க சுகாதாரப் பிரச்சினைகள் இரண்டினை விளக்குக.
(ii) தரவு மறைகுறியாக்கம் (data encryption) என்பதால் கருதப்படுவது யாது என விவரிக்குக.
(iii) பாடசாலைப் பிள்ளைகளின் தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியல் அறிவை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று தொடக்க முயற்சிகளை விளக்குக.
2010 Question No. 06
(a) தகவல். தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) துறையில் உள்ள மூன்று தொழில் வாய்ப்புகளை இனங்கண்டு, அவை ஒவ்வொன்றினதும் கொள்பணிகளை (job tasks) விவரிக்க.
(b) ICT துறையில் உள்ள இரு ஒழுக்காற்றியல் விவாதவிடயங்களை (ethical issues) சுருக்கமாக விளக்குக. உமது விடையில் குறிப்பிடப்பட்ட ஒழுக்காற்றியல் விவாதவிடயம் ஒவ்வொன்றுக்கும் ஓர் உதாரணம் இடம்பெற வேண்டும்.
(c) பிழையான நிலைப்பாட்டுடன் (posture) கணினிகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படத்தக்க இரு உடனல் விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.
(d) முறைவழியாக்கிக் (processor) கதி, நினைவகக் கொள்திறன் (memory capacity) போன்ற கணினி விவரக்கூற்றுகள் தனியாள் கணினியைத் தெரிந்தெடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாகும். வீட்டுத் தேவைக்காக ஒரு தனியாள் கணினியை வாங்கும்போது நீர் கருத்திற்கொள்ளும் இரு வேறு காரணிகளைச் சுருக்கமாக விவரிக்க. (c) பின்வரும் துறைகளில் எவையேனும் இரண்டின் ஒவ்வொரு ICT பிரயோகத்தை விளக்குக.
(i) கல்வி
(ii) சுகாதாரம்
(iii) வியாபாரம்
2011 Question No. 06
6. (அ) தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத் துறையில் பின்வரும் ஏதேனும் இரண்டு வகையான வேலைகளில் மேஜர்
வேலையின் செயல்பாட்டை சுருக்கமாக விவரிக்கவும்.
(i) சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் – System Analyst
(ii) மென்பொருள் பொறியாளர் – Software Engineer
(iii) டெஸ்க்டாப் வெளியீட்டாளர் – Desktop Publisher
(ஆ) மீள்தகைவுக் காயம் RSI (Repetitive strain injury) என்பதன் பொருள் என்ன என்பதை விளக்குக.
RSI உடன் தொடர்புடைய இரண்டு உடல்நலப் பிரச்சனைகளை பட்டியலிடுங்கள்.
(இ) உறவினர் ஒருவர் தனது வீட்டில் பயன்படுத்த கணினியைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் உதவியை நாடிய நேரத்தைக் கவனியுங்கள். அவருக்கு பொருத்தமான கணினியைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று மிக முக்கியமான தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பட்டியலிடுங்கள்.
(ஈ) உங்கள் உறவினரிடம் காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணை விலங்குகள் உள்ள பண்ணை இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம், வானிலை, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்துகிறார். அவரது பண்ணையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மற்ற இரண்டு பயன்பாடுகள் தெளிவாக உள்ளன
2012 Question No. 06
6.
(a)
(i) சாமன் தற்போது வலை விருத்தியாக்கியாகத் (web developer) தொழில் புரிகின்றார். சாமனின் தற்போதைய தொழிலின் இரு பிரதான கொள்பணிகளைப் பட்டியற்படுத்துக.
(ii) அவர் வலை நிருவாகியாக (network administrator) இருப்பதற்குத் தமது தொழிலை மாற்ற உத்தேசித்துள்ளார். உத்தேசித்த தொழிலின் மூன்று கொள்பணிகளைப் பட்டியற்படுத்துக.
(b) யோகன் தரவு உள்ளீட்டாளராகத் தொழில் புரிகின்றார். அவர் நலிவடைந்த தொழில் நிலைமைகள் பற்றி அடிக்கடி. முறைப்படுகின்றார். இதன் விளைவாக. அலுவலகத்தில் நீண்ட நேரங்களுக்குத் தொழில் புரிந்த பின்னர் அவருக்குக் கண் உளைச்சலும் (eye strain) முதுகு வலியும் (back pain) ஏற்படுகின்றன.
(i) அவர் அனுபவிக்கும் உடனல நிலைமைக்குப் பொருத்தமான பெயர் யாது?
(ii) அவர் அனுபவிக்கும் அத்தகைய உடனல விளைவுகளை இழிவளவாக்கும் மூன்று வழிகளைத் தெரிவிக்க.
c) உமது உறவினர் ஒருவர் தமது அலுவலகத்தின் கணினி வலையமைப்புடன் தொடுக்கப்பட்டுள்ள தமது அலுவலகச் கணினியில் ஒரு நச்சு நிரல் தொற்றியுள்ளதாக முறைப்படுகின்றார்.
(i) நச்சு நிரல் தொற்று ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள இரு காரணங்களை எழுதுக.
(ii) அத்தகைய நச்சு நிரல் தொற்றுகளிலிருந்து கணினியைப் பாதுகாப்பதற்கு நிறுவப்படத்தக்க மென்பொருள் பிரயோகத்தின் வகையைக் குறிப்பிட்டு, இப்பாதுகாப்பை எங்ஙனம் தொடர்ச்சியாகப் பராமரிக்கலாமென விளக்குக.
(iii) நச்சு நிரல் தொற்றைத் தவிர, வலையமைப்பினூடாக இக்கணினியைப் பாதிக்கத்தக்க வேறு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலைக் (sccurity threat) குறிப்பிடுக.
(iv) நீர் மேலே (iii) இல் இனங்கண்ட அச்சுறுத்தலிலிருந்து கணினியைப் பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க ஒரு முறையை எழுதுக.
2013 Question No. 06
இரண்டு நிரல்களைக் கொண்ட கீழே தரப்பட்ட அட்டவணையைக் கருதுக இடது நிரலில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) துறையிலுள்ள சில தொழில்களின் தலைப்புகள் உள்ளன. வலது நிரலில் அத்தொழிலுடன் தொடர்புபட்ட கொள்பணிகள் (tasks) சில குறிப்பிடப்பட்டுள்ளன.
தொழில் தலைப்பு | கொள்பணி |
A | பாடங்கள் (text), இலக்கத் தரவுகள், ஒளிப்படங்கள். வரைபடங்கள் மற்றும் கட்டில வரைபுகள் ஆகியவற்றைக் கொண்டு கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தி வடிவமைத்து இணைத்து. அச்சிடுவதற்குத் தயார்செய்தல். |
B, | பகுப்பாய்வு செய்தல் (analyses), வடிவமைத்தல் (designs), நிறைவேற்றுதல் (implements), மற்றும் முறைமைகளைப் பரீட்சித்தல் (tests) |
C | கணினி முறைமைகளை கொண்வனவு செய்வதிலும் நிறுவவதிலும் உதவுதல் |
D | அலுவலகத்தின் பலன்தரு திறனைக் கூட்டுவதற்கு சொல்முறை வழிப்படுத்தல் (word processing), விரிதாள் (spread sheet), தரவுத்தளம் (database) மற்றும் நிகழ்த்துகை (presentation) மென்பொருள்களைப் பயன்படுத்துதல், |
A, B, C, D எனக் குறித்துக் காட்டப்பட்ட தொழில்களுக்கு மிகப் பொருத்தமான தொழில் தலைப்புகளை கிழேயுள்ள பட்டியலிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.
தொழில் தொடர்பான பட்டியல்:
மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer), இணையத்த வடிவமைப்பாளர் (Web Developer) வலையமைப்பு நிர்வாகி (Network Administrator), மேசைமேல் வெளியீட்டாளர் (Desktop Publisher) முறைமைகள் பொறியியலாளர் (Systems Engineer), கணிணி பிரயோக உதவியாளர் (Computer Application Assistant)
(b) மிகப் பொருத்தமான பதத்தினைக் கீழ்வரும் பட்டியலிலிருந்து தெரிவுசெய்து. கீழ்வரும் கூற்றுகளில் K தொடங்கி O வரை முகப்பு அடையாளமிடப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
பதங்களின் பட்டியல்:
பாதுகாப்பு அச்சுறுத்தல் (security threats), பிறழ்பொருள் (malware), நச்சு நிரல் எதிர்ப்பு (anti virus), உரிமை மீறவ் (piracy), தனித்துவம் (privacy), தர்க்கணியல் பாதுகாப்பு (logical security), பெளதிக பாதுகாப்பு (physicul security), தீச்சுவர் (firewall)
K இலிருந்து O வரையான முகப்பு அடையாளங்களுக்கு எதிரே பொருத்தமான பதத்தை எழுத வேண்டும்.
I அனுமதியின்றி மென்பொருள்களைப் பிரதிசெய்தல் K ……………. இற்கு உதாரணமாகும்.
II வைரஸ் (virus). வோர்ம் (worm), ரொஜான் ஹோர்ஸி (trojan horse) எனிபன L……………………. இற்கு உதாரணங்களாகும்.
III சேவையக அறையின் வாசற்கதவினை முடிவைத்திருத்தல் M……………………….. இற்கு உதாரணமாகும்.
IV கடவுச் சொற்களைப் பயன்படுத்தி கணினி முறைமையொன்றைப் பாதுகாத்தல் N………………………………. இற்கு உதாரணமாகும்.
V உள்வரும். வெளிச்செல்லும் வலையமைப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் O ……………………………….தொழிலிற்கு உதாரணமாகும்.
2014 Question No. 06
6.(அ) கணினியொன்றைக் கொள்வனவு செய்யும்போது வன்பொருள் விவரக்குறிப்புகளுடன் (hardware specifications) இன்னும் சில காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும்.
(i) வீட்டுப் பாவனைக்கெனக் கொள்வனவு செய்யப்படும் கணினியொன்று தொடர்பாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான வன்பொருள் விவரக்குறிப்புகள் மூன்றினைப் பட்டியலிடுக.
(ii) வன்பொருள் விவரக்குறிப்புகளைத் தவிர மேலதிகமாக நீங்கள் முக்கியமாகக் கருத வேண்டிய வேறு காரணிகள் மூன்றினைப் பட்டியலிடுக.
(ஆ) கனேத் மற்றும் சிவா ஆகிய இருவரும் குறித்தவொரு கம்பனியில் வேலை செய்கின்றனர். அவர்களிருவரும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் துறை (ICT) தொடர்பான பதவிகளை ஆற்றுகின்றனர். சுனேத் மேசைமேல் கணினியைப் பாவிப்பதோடு அதன் மூலம் விரிதாள் மென்பொருள் போன்ற office application தொடர்பான வேலைகளில் தனது முகாமையாளருக்கு உதவுகிறார். சிவா கணினி வலையமைப்பின் செயற்பாடுகளைப் பராமரிக்கவும் மேற்பார்வை செய்யவும் என நியமிக்கப்பட்டுள்ளார்.
(i) சுனேத்திற்குரிய மிகப் பொருத்தமான தொழில் தலைப்பு என்ன ? உங்கள் விடையை நியாயப்படுத்துக.
(ii) சிவாவிற்குரிய மிகப் பொருத்தமான தொழில் தலைப்பைக் கண்டறிக.
(iii) விரிதாள் மென்பொருள் தவிர்ந்த சுனேத் தனது நிறுவன வேலைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஏனைய பிரயோக மென்பொருள் (application software) வகைகள் இரண்டைப் பெயரிடுக.
(இ) ICT இற்கு ஏற்ற சட்ட மற்றும் நீதி நெறிக்குரிய பிரச்சினைகளில் (legal and ethical issues) இரண்டு கீழே தரப்பட்டுள்ளன.
(i) அந்தரங்கமானது (privacy)
(ii) களவாடப்படல் (piracy)
மேலுள்ள பதங்களைச் சுருக்கமாக விளக்குக.
(ஈ) கணினி முறைமைகளைப் பாதுகாப்பதற்கு கீழே தரப்பட்டுள்ளவை பயன்படுத்தப்படும்.
(i) நச்சு-எதிர்ப்பு மென்பொருள் (anti-virus software)
(ii) தீச்சுவர் (firewall)
மேற்கூறிய ஒவ்வொன்றினதும் தொழிற்பாடுகளைச் சுருக்கமாக விளக்குக.
2015 Question No. 06
6. (a)
A தொடக்கம் D வரைக்கும் உள்ள கூற்றுகளில் தரப்பட்டுள்ள விவரணத்துடன் சரியாகப் பொருந்தும் சரியான பதத்தைக் கீழே தரப்பட்டுள்ள பதங்களின் பட்டியலிலிருந்து தெரிந்தெடுக்க. உமது விடைத்தாளில் A தொடக்கம் D வரையுள்ள கூற்றுகளுக்கு எதிரே சரியான பதங்களை எழுதுக.
{நச்சுநிரல் வருடி (virus scanner). குறிமுறையாக்கம் (encryption). தீச்சுவர் (firewall). Spam வடி. சாதனச் செலுத்தி (Device driver). காப்பு எடுத்தல் (backup), வட்டு ஒருங்கமைப்பி (Disk defragmenter)}
A இதன் முதல் நோக்கம் தரவு நீக்கல் அல்லது சீரழிவு (corruption) காரணமாக ஏற்பட்ட இழப்பிலிருந்து தரவை மீட்டல் ஆகும்.
B இது குறும்பர்கள் கணினி வலையமைப்பை அதிகாரமின்றி அல்லது தேவைப்படாத விதத்தில் அடைவதைத் தடுப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் அல்லது வன்பொருள் தடை ஆகும்.
C இது எளிய பாடத்தை அல்லது வேறு தரவுகளை மனிதர்கள் வாசிக்க முடியாத நிலைக்கு மாற்றுகின்றது.
D இது வேண்டுகோள் விடுக்கப்படாத அல்லது தேவைப்படாத மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் உட்பெட்டியினுள் புகுவதனைத் தடுக்கின்றது.
(b) பின்வரும் காட்சியைக் கருதுக.
மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கஞ் செய்து CDகளில் பதிவுசெய்து விற்பனை செய்வதுமான ஒரு கடையிலிருந்து வாங்கிய ஒரு வர்த்தக மென்பொருள் பிரதியை உமது நண்பர்களில் ஒருவர் உங்களுக்குத் தருகின்றார் எனக் கொள்க. அதிகாரம் பெற்ற முகவரிடமிருந்து வாங்கிய அதே மென்பொருளின் உண்மையான விலையிலும் பார்க்க அதன் விலை கணிசமான அளவில் மலிவானதென அவர் கூறுகின்றார்.
உமது நண்பர் வழங்கிய மென்பொருள் CD ஐப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக.
(c) பின்வருவனவற்றைக் கருதுக.
“இலக்கமுறைப் பிரிவு (digital divide) என்பது ICT இற்கான பிரவேசம், ICT பற்றிய அறிவு. ICT மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிய விளக்கம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களுக்கும் கொண்டிராதவர்களுக்கும் இடையேயுள்ள உலகச் சனத்தொகையிலுள்ள பிரிவாகும். அது ஓர் உட்கட்டமைப்பு வெளியையும் அறிவு வெளியையும் கொண்டுள்ளது.”
இலக்கமுறைப் பிரிவை இணைப்பதற்கு உதவும் இரண்டு முறைகளை எழுதுக.
(d) பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் உண்மையானவையா (T), பொய்யானவையா (F) எனக் குறிப்பிடுக.
(i) இணையத்திற்கு வரையறைகள் இல்லாது இருப்பதனால் வலையில் (web) காணப்படும் (சூதாட்டம் போன்ற) சில உள்ளடக்கங்கள் ஒரு நாட்டில் சட்டரீதியானதாக இருக்கும் அதேவேளை வேறு நாடுகளில் சட்டரீதியற்றதாக இருக்கலாம்.
(ii) பிரத்தியேகத்தன்மை (privacy) என்பது உத்தரவு பெற்ற மென்பொருளைச் சட்டரீதியற்ற முறையில் நகல் செய்வதுடனும் விநியோகம் செய்வதுடனும் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை களவு (piracy) என்பது அதிகாரமின்றிய வெளிப்படுத்துகையிலிருந்து தனியாட்களின் சொந்தத் தகவல்களைப் பாதுகாப்பதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
(iii) பொது மக்களுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் வலைச் சேவையகக் கணினிக்குத் தடைப்படாத வலு வழங்கலை (UPS) அலகைப் பயன்படுத்துதல் அவசியமாக உள்ள அதேவேளை அது சொந்தப் பணிக்காகப் பயன்படுத்தும் ஒரு புதிய மடிக்கணினிக்கு அத்தியாவசியமற்றது.
2016 Question No. 06
6.(a) ஒரு கம்பனி பல்வேறு நாடுகளில் உள்ள அதன் கிளைகளின் பிரதிநிதிகளுடன் மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடத்துவதற்குக் காணொளி மாநாட்டைப் பயன்படுத்துகின்றது.
(i) காணொளி மாநாட்டுக்கு அத்தியாவசியமான மூன்று உருப்படிகளை எழுதுக.
(ii) பாரம்பரிய நேருக்கு நேரான கூட்டங்களை விட காணொளி மாநாட்டின் இரு அனுகூலங்களைத் தருக. (b) நிகழ்நிலைக் கொள்வனவு (On-line shopping) பிரசித்திபெற்று வருகின்றது. சாதாரண கொள்வனவுடன் ஒப்பிடும்போது நிகழ்நிலைக் கொள்வனவின் இரு அனுகூலங்களையும் இரு பிரதிகூலங்களையும் விளக்குக.
(c) ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் தனது தினசரிச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஒரு கணினியைக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கின்றார். அவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஒரு கணினியை வாங்குவதில் கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களையும் தேவைகளையும் பற்றி உம்மிடம் விசாரிக்கின்றார்.
ஒரு கணினியை வாங்கும்போது கருத்திற் கொள்ள வேண்டிய மூன்று தொழினுட்ப அம்சங்களையும் மூன்று தொழினுட்பமற்ற அம்சங்களையும் எழுதுக.
2017 Question No. 06
6. (a) கணினியுடன் தொடர்புபட்ட சில விவரக்கூற்றுகளைக் கொண்ட A தொடக்கம் G வரைக்கும் முகப்படையாளமிடப்பட்டுள்ள பின்வரும் பட்டியலைக் கருதுக.
A- 1.9 ¢Hz,
B-8 GB DDR4,
C– 14 inch (அங்குலம்),
D-500 GB SATA,
E– 24 ports (துறைகள்),
F– 1.9kg. G- 24 pages per minute (நிமிடத்திற்கு 24 பக்கங்கள்
பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ள பதங்கள் ஒவ்வொன்றுக்கும் உகந்த விவரக்கூற்று முகப்படையாளத்தை மேற்படி முகப்படையாளங்களிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.
பட்டியல் :
{காட்சி, வலையமைப்பு ஆளி, அச்சுப்பொறி, முறைவழியாக்கியின் கதி (Processor speed), RAM. தேக்ககம் (Storage), நிறை (Wéight)}
(குறிப்பு : உரிய விவரக்கூற்றுக்கான பதத்தையும் முகப்படையாளத்தையும் உங்கள் விடைத்தாளில் எழுதுக.)
(b) ஒரு தகவல் முறைமையின் விருத்தியையும் நடைமுறைப்படுத்தலையும் விவரிக்கும் பின்வரும் பந்தியைக் கருதுக.
புத்திக்கா நடப்பு முறைமை பற்றிக் கற்பதன் மூலமும் பயனர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமும் ஒரு புதிய மாணவர் தகவல் முறைமையின் தேவைகளை இனங்காண்கிறார்.
பின்னர் அவர், மாணவர் தரவை ராஜ் இம்முறைமையில் எளிதாகச் சேர்க்கத்தக்கதாக, தேவைகளைத் திருப்தியாக்கும் ஒரு முறைமையை வடிவமைக்கிறார்.
புத்திக்கா உருவாக்கிய வடிவமைப்பை அடிப்படையாய்க் கொண்டு கித்மி மாணவர் தகவல் முறைமையை உருவாக்குகிறார்.
புதிய முறைமையை இயக்கத்தக்கதாகக் கிஹான் ஒரு புதிய சேவையகத்தை (server) நிறுவிச் (installed) சோதிக்கிறார்.
அடுத்த வாரத்திலிருந்து புதிய மாணவர் தகவல் முறைமையைப் பயன்படுத்தத்தக்கதாக இருக்கும் என்பதைப் பயனர்களுக்கு அறிவிப்பதற்குக் கிருஷ்ணா பல்கலைக்கழக வலைத்தளத்தை இற்றைப்படுத்துகிறார்.
தகவல் தொழினுட்பவியல் துறையில் உள்ள சில தொழில் வாய்ப்புகள் பின்வரும் பட்டியலில் தொடக்கம்
வரையான முகப்படையாளங்களினால் காட்டப்பட்டுள்ளன.
H – செய்நிரலர்,
I – முறைமைப் பகுப்பாய்வாளர்,
J – முறைமைப் பொறியியலாளர்,
K – தரவு உள்ளீட்டாளர்,
L-வலைப் பொறுப்பாளர் (Web master)
தரப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாய்க் கொண்டு புத்திக்கா, ராஜ், கித்மி, கிஹான், கிருஷ்ணா ஆகியோருக்கு உகந்த தொழில் வாய்ப்புகளைப் பட்டியலிலிருந்து இனங்காண்க.
ஒவ்வொரு நபரின் பெயரையும் உரிய தொழில் வாய்ப்பின் முகப்படையாளத்தையும் உங்கள் விடைத்தாளில் எழுதுக.
2017 Question No 6
M முதல் P – வரை முகப்படையாளமிடப்பட்ட பின்வரும் பதங்கள் மேற்குறித்த அட்டவணையில் தரப்பட்டுள்ள) விவரணங்களுடன் தொடர்புபட்டவை.
[M – களவு, N – கண் உறுத்தல், O – றோஜன் ஹோர்ஸ், P – முதுகுவலி]மேற்குறித்த அட்டவணையில் தரப்பட்டுள்ள விவரணங்கள் ஒவ்வொன்றுக்கும் உகந்த பதத்தை மேற்குறித்த பட்டியலிலிருந்து இனங்கண்டு எழுதுக.
(குறிப்பு : விடைத்தாளில் விவரணத்தின் இலக்கத்திற்கு எதிரே உகந்த பதத்தின் உரிய முகப்படையாளத்தை எழுதுக.)
(ii) Q முத்ல் T வரை முகப்படையாளம் இடப்பட்ட பின்வரும் பதங்கள் மேற்குறித்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட பிரச்சினைகளுக்குரிய சாத்தியமான தீர்வுகளை வகைகுறிக்கின்றன.
Q-சரியான கொண்ணிலையில் அமருதல்,
R– நகலுரிமைச் சட்டங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்,
S– கணினியைப் பயன்படுத்தும்போது கண்னை இடையிடையே ஒரு தூரப் பொருளில் குவியப்படுத்தல்,
T– நச்சுநிரலெதிர்ப்பு மென்பொருளை நிறுவுதல்
மேற்குறித்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உகந்த தீர்வை மேற்குறித்த பட்டியலிலிருந்து இனங்கண்டு எழுதுக.
(குறிப்பு : உமது விடைத்தாளில் விவரணத்தின் இலக்கத்திற்கு எதிரே உகந்த தீர்வின் உரிய முகப்படையாளத்தை எழுதுக.)