1. sales.xls எனும் கோப்பை மேலுள்ள இணைப்பிலிருந்து உமது கணினிக்குத் தரவிரக்கம் செய்க. இவ்விரிதாளானது ஒரு புத்தகக் கடையில் ஒரு குறித்த நாளொன்றின் விற்பனை விவரங்களைக் காட்டுகிறது.
- தரவிரக்கம் செய்த கோப்பை எம்.எஸ்.எக்ஸல் விரிதாள் மென்பொருளோடு திறந்து கொள்ளுங்கள்.
- நிரல் B யிற்கு வலப்புறமாக ஒரு புதிய நிரலைச் செருகுக. அதன் தலைப்பாக Quantity என்பதை வழங்கி அதன் கீழ் (C2 முதல் c6 வரை) கீழுள்ளவாறு தரவுகளை உள்ளீடு செய்க.
- பொருளொன்றின் விற்பனைத் தொகையானது பொருளின் எண்ணிக்கையை அலகு ஒன்றின் விலையால் பெருக்குவதன் மூலம் பெறப்படுகிறது.
Amount = Quantity X Unit price
பென்சில் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்க D2 கலத்தில் பொருத்தமான சூத்திரத்தை நுழைக்க.
- மேலே இட்ட அதே சூத்திரத்தை D3 முதல் D6 வரை நகல் செய்வதன் மூலம் ஏனைய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்க
- அனைத்து பொருட்களுக்கும் 2 % விலைக் கழிவு வழங்கப்படுமாயின் பென்சில் விற்பனையில் வழங்கப்பட்ட விலைக் கழிவைக் கணிக்கப் பொருத்தமான ஒரு சூத்திரத்தை கலம் E2 இல் நுழைக்க.
குறிப்பு : உங்கள் சூத்திரத்தில் F7 எனும் கல முகவரி அவசியம் இடம் பெறல் வேண்டும்.
- மேலே வழங்கிய சூத்திரத்தைப் E3 முதல் E6 வரை நகல் செய்து எனைய பொருட்களுக்கான விலைக் கழிவைக் கணிக்க.
- கலம் F1 இல் Total (Rs) என தலைப்பிடுவதோடு . அதனை தடித்த எழுத்தாதாக மாற்றுக.
- ஒவ்வொரு பொருள் விற்பனை மூலமும் கிடைக்கப்பெற்ற தொகையானது கீழே குறிப்பிட்டிருப்பது போல் கணிக்கப்படுகிறது.
Total = Amount – Discount
பென்சில் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்கப் பொருத்தமான சூத்திரத்தை F2 கலத்தில் இடுவதோடு F3 முதல் F6 வரை அதனைப் நகல் செய்து ஏனைய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்பட்ட தொகையைக் கணிக்க.
- ஒவ்வொரு பொருளின் விற்பனை மூலமும் பெறப்பட்ட மொத்த தொகையைக் கணிக்கப் பொருத்தமான சூத்திரத்தை கலம் F7 இல் நுழைக்க. (F2 முதல் F6 வரையான எண்களின் கூட்டுத் தொகை) அதனை தடித்த எழுத்தாதாக மாற்றுக
- ஒவ்வொரு பொருளின் விற்பனை மூலமும் கிடைக்கப்பெற்ற மொத்த தொகையை ஒரு பை-வரைபின் மூலம்காட்டுவதோடு அதன் தலைப்பாக Book shop sale என இடுக.
- இறுதியாக உங்கள் கோப்பை NIC No .xls என டெஸ்க்டாப்பில் சேமிக்க.