விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழையுங்கள். அங்கு. System தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error Reporting பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Disable Error Reporting தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். தொல்லை ஓய்ந்து விடும்.
Check Also
Read WhatsApp messages without opening the App
Read WhatsApp messages without opening the App மொபைலில் வாட்சப் செயலியைத் திறக்காமல் செய்திகளைப் படிப்பது எப்படி? வாட்சப்பில் …